திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் உருவத்தை ஓவியமாக வரைந்தவர் ஓவியப் பெருந்தகைகே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்கள்.
திருவள்ளுவர் படம் வரைந்த வேணு கோபால் சர்மா அவர்கள் மயிலாடுதுறை மதீனா லாட்கில் தங்கி இருந்தார். அவர் எங்கள் சகோதரர் அப்துல் ஹகீம் அவர்களுக்கு நண்பர். சகோதரர் அப்துல் ஹகீம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சர்மா அவர்கள் வரைந்து கொடுத்த எங்கள் தந்தை
ஹாஜி சி.ஈ.அப்துல் காதர் சாஹிப் அவர்கள்
படம் .
Hajee S.E.A Abdul Kader SAhib
சில காலம் கடந்துதான் திரு.வேணுகோபால் சர்மா அவர்கள், திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார். அந்த வள்ளுவர் படம் பல தலைவர்கள் முன்பு சென்னையில் பெரிய விழாவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. நான் அப்பொழுது சென்னை லயோலா கல்லூயில் படித்துக் கொண்டிருந்தபோது அந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.என்னுடன் நண்பர் முரசொலி செல்வம் அவர்களும் வந்திருந்தார்.
No comments:
Post a Comment