Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts
Thursday, 16 January 2014
Monday, 13 January 2014
சிந்தனையிலிருந்து பிறப்பது சிறப்பு .
சிந்தனையை கருவாக்கி
கருவினை கட்டுரையாக்கி
கட்டுரையை மற்றவர்க்கு பகிர்ந்து
மற்றவர் பலனடைய
நாமும் பயன் பெறுகிறோம்.
எழுத்துக்கு எதற்கு காப்புரிமை
எழுதும் ஆற்றலை தூவிவிட்ட இறைவன்
எழுதும் ஆற்றலை தேடி பொறுக்கிக் கொண்டவர் நாம்
பொறுக்கியதை வளர்த்துக் கொள்ளும் பொறுப்பை நம்மிடம் கொடுத்தான்
கொடுத்ததை பகிர்ந்துவிட மாண்பை அடைகின்றோம்.
கருவினை கட்டுரையாக்கி
கட்டுரையை மற்றவர்க்கு பகிர்ந்து
மற்றவர் பலனடைய
நாமும் பயன் பெறுகிறோம்.
எழுத்துக்கு எதற்கு காப்புரிமை
எழுதும் ஆற்றலை தூவிவிட்ட இறைவன்
எழுதும் ஆற்றலை தேடி பொறுக்கிக் கொண்டவர் நாம்
பொறுக்கியதை வளர்த்துக் கொள்ளும் பொறுப்பை நம்மிடம் கொடுத்தான்
கொடுத்ததை பகிர்ந்துவிட மாண்பை அடைகின்றோம்.
Friday, 3 January 2014
புன்னகை
உன் துயரமும் உன்னை வாட்டுகிறது
உன் நம்பிக்கையும் உன்னை விட்டு நகர்கின்றது
அத்துடன் உன்னால் மகிழ்வாய்
மற்றவரைக் கண்டால் புன்னகை பூக்க முடிகின்றது
அதுவே உனது பலமாக உள்ளது
அதனைக் கண்டு நான் அதிசயிக்கின்றேன்
அந்த இயல்பான புன்னகை என்னிடம் இல்லையே
அந்த இயல்பான புன்னகை என்னிடம் இல்லாததினால்
நான் வாழும் வாழ்வு ஒளி தராத வாழ்வானதோ !
Sunday, 29 September 2013
நான் எப்பொழுதும் இளமை!
நான் எப்பொழுதும் இளமை
நான் முதுமையிலும் இளமையாக இருக்கிறேன்
நான் பெற்றிருக்கும் மனம் இளமையானது
நான் பெற்றிருக்கும் இந்த இளமை இனி கிடைக்க வாய்ப்பில்லை
நான் பழகும் மக்கள் இளமையான எண்ணம் கொண்டவர்கள்
நான் பழகும் மக்கள் மகிழ்வோடு இருக்கிறார்கள்
நான் சந்திக்கும் மக்கள் குறை கூறி என்னை துன்பத்தில் முடக்குவதில்லை
நான் சந்திக்கும் மக்கள் குறையை குலைத்து நிறைவை தருகிறார்கள்
நான் பெற்றிருக்கும் நேரம் உயர்வானது
நான் பெற்றிருக்கும் நேரத்தை உயர்வாக்கவே விரும்புகின்றேன்
நான் பெற்றிருக்கும் மக்களை மகிழ்வோடு இருக்க விரும்புகின்றேன்
நான் பெற்றிருக்கும் மனது உயர்வு தாழ்வு என்று மக்களை வேறு படுத்த நினைக்கவில்லை
Friday, 5 July 2013
மலரை பறிக்க முள்ளும் குத்தி குருதியும் வருவதுண்டு
சிந்தனை மாறுபட்டது
படிப்பு அறிவைத் தரும்
அனுபவம் செயலை சீர் படுத்தும்
படிப்பால் வந்த அறிவும்
அனுபவத்தால் வந்த முதுமையும் சிறப்பு தரும்
முதுமை வந்து சேர ஞானம் வர வாழ்வு சிறக்கும்
முதுமையில் இளமையில் தொட்டதை விட்டதை நினைக்க புலம்பல் வரும்.
முதுமையின் புலம்பலை இளமை ஏற்பதில்லை
இளமையின் தடுமாற்றத்தை முதுமை பரிவோடு பார்க்கிறது
படிப்பு அறிவைத் தரும்
அனுபவம் செயலை சீர் படுத்தும்
படிப்பால் வந்த அறிவும்
அனுபவத்தால் வந்த முதுமையும் சிறப்பு தரும்
முதுமை வந்து சேர ஞானம் வர வாழ்வு சிறக்கும்
முதுமையில் இளமையில் தொட்டதை விட்டதை நினைக்க புலம்பல் வரும்.
முதுமையின் புலம்பலை இளமை ஏற்பதில்லை
இளமையின் தடுமாற்றத்தை முதுமை பரிவோடு பார்க்கிறது
Friday, 7 June 2013
யார் சொன்னார் ? ஏன் சொன்னார் !
சொன்னவர் செயல் படுத்தினாரா!
சொல்வது எளிது .செயல்படுத்துவது கடினம் .
யார் சொன்னார் ? ஏன் சொன்னார் !
சொன்னவர் செயல் படுத்தினாரா! என்று ஆய்வு செய்வதை தவிர்த்து சொல்வது உயர்வாக இருப்பின் அதனை மனதில் இருத்திக் கொள்வது சிறப்பு தரலாம். சொன்னவர் சொன்னபடி செய்யவில்லை என்பதை நினைத்து நாம் ஒதுக்க ஆரம்பித்தால் ஒன்றுமே நமக்கு கிடைத்திருக்காது. உயர்ந்த கருத்துகளை சொன்னவர் சொல்லியபடி செய்திருந்தால் அவர் உயர்ந்த நிலைக்கு உரியவராகி விட்டார்.
இறைவன் சிலருக்கு அறிவைத் தந்திருக்கலாம் .அவர் அதனை மற்றவருக்கு பகிர்ந்திருப்பார்.அதனை நாம் பெற்றுக் கொள்வோம்.பகிர்ந்தவர் அதன்படி நடந்தாரா என்ற சிந்தனை பகிர்ந்த உயர்ந்த பொருளை இழக்க நேரிடும் . வீரத்தைப் பாடியவர் கோழையாகவும் இருக்கலாம் . காதலைப் பற்றி கவிதைப் பாடியவர் காதலித்துத்தான் பாட வேண்டும் என்று நினைப்பது முறையாகிவிடாது.
உற்பத்தி செய்பவர் ஒருவர் ,விற்பவர் ஒருவர் ,வாங்குபவர் ஒருவர், பயனடைபவர் ஒருவர் .இது யதார்த்தம். கருவைக் கண்டு பெறுவதைக் பெற்று பயனடைதலும் சிறப்புதான்.
Tuesday, 2 April 2013
உருவாகும் கருத்துகள் உயர்வாக இருக்கட்டும்
உருவாகும் கருத்துகள் உயர்வடைய வழி காணட்டும்
கருமேகம் கடலை நோக்கி ஓடி நீரைக் கொட்ட
கொட்டிய நீரும் கடல் நீரோடு கசந்து போகும்
கார் மேகம் காதல் கொண்டு ஒன்றோடு ஒன்று தொடர
காற்றின் குளிர் மேகத்தை சூழ அடைமழையாய் கொட்டும்
மழை கொட்டிய காய்ந்த இடம் குளிர்ச்சியடைய
காதலர்களுக்கு சூடேற்றம் கொண்டது செடிகள் வளர்ந்தன
Subscribe to:
Posts (Atom)




