Friday 5 July 2013

மலரை பறிக்க முள்ளும் குத்தி குருதியும் வருவதுண்டு

சிந்தனை மாறுபட்டது

படிப்பு அறிவைத் தரும்
அனுபவம் செயலை சீர் படுத்தும்

படிப்பால் வந்த அறிவும்
அனுபவத்தால் வந்த முதுமையும் சிறப்பு தரும்

முதுமை வந்து சேர ஞானம் வர வாழ்வு சிறக்கும்
முதுமையில் இளமையில் தொட்டதை விட்டதை நினைக்க புலம்பல் வரும்.

முதுமையின் புலம்பலை இளமை ஏற்பதில்லை
இளமையின் தடுமாற்றத்தை முதுமை பரிவோடு பார்க்கிறது

முதுமைக்கு காதல் வருவது தவறென இளமை நினைக்கிறது
முதுமையின் காதல் ஆதரவு தேடி நிற்கிறது இதனை இளமை விளங்குவதில்லை

இளமையின் காதல் அவசரத்தால் வந்த விளைவு
இளமையின் காதல் இயல்பாய் இருப்பினும் இடையூறுகளை சந்திக்க நேரிடும்

முதுமை கடந்தகால காதலை கவிதையாகத் தந்தால் அது கேவலப் படுத்தப் படுகிறது
இளமை நிகழ்கால காதலை கவிதையாகத் தந்தால் உயர்வாக சித்தரிக்கப் படுகிறது

சங்க இலக்கிய காதல் கவிதைகளில் காதலில் காமமும் கலந்து நிற்கும்
சங்க இலக்கிய காதல் கவிதை யாத்தவர்களில் முனிவராக வாழ்ந்தோரும் உண்டு

கவிதைகள் காவியமாக வந்து பல உயர்வான கருத்துகளை மக்களுக்கு வழி காட்டும்
கவிதைகள் சரித்திரமாக சொல்லப் பட்டு மக்களை பழமையை அறிய வைக்கும் .

ஒரு பொருளைப் பெற பல இன்னல்கள் அடைவதுண்டு
மலரை பறிக்க முள்ளும் குத்தி குருதியும் வருவதுண்டு

2 comments:

  1. ரசித்த வைத்தது உங்களின் மாறுபட்ட சிந்தனை... பாராட்டுக்கள்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Life becomes a beautiful poem when written by knowledge and wisdom.
    Agree with what you say. All golden words.

    ReplyDelete