Sunday 29 September 2013

நான் எப்பொழுதும் இளமை!



நான் எப்பொழுதும் இளமை
நான் முதுமையிலும் இளமையாக இருக்கிறேன்
நான் பெற்றிருக்கும் மனம் இளமையானது
நான் பெற்றிருக்கும் இந்த இளமை இனி கிடைக்க வாய்ப்பில்லை

நான் பழகும் மக்கள் இளமையான எண்ணம் கொண்டவர்கள்
நான் பழகும் மக்கள் மகிழ்வோடு இருக்கிறார்கள்
நான் சந்திக்கும் மக்கள் குறை கூறி என்னை துன்பத்தில் முடக்குவதில்லை
நான் சந்திக்கும் மக்கள் குறையை குலைத்து நிறைவை தருகிறார்கள்

நான் பெற்றிருக்கும் நேரம் உயர்வானது
நான் பெற்றிருக்கும் நேரத்தை உயர்வாக்கவே விரும்புகின்றேன்
நான் பெற்றிருக்கும் மக்களை மகிழ்வோடு இருக்க விரும்புகின்றேன்
நான் பெற்றிருக்கும் மனது உயர்வு தாழ்வு என்று மக்களை வேறு படுத்த நினைக்கவில்லை

என் சிந்தனை என்னை இளமையாக இருக்கச் செய்கின்றது
என் செயல் அச்சம் தவிர்த்து நேர்மையை நாடி நிற்கிறது
என் கொள்கை உயர்வை நோக்கி நகர்கிறது
என் நேசம் இறை நேசத்தோடு இணைந்து போகிறது

நான் பெற்றிருக்கும் தற்கால வாழக்கை நிரந்தரமானதல்ல
நான் பெற விரும்புவது நிரந்தரமாக நிற்கும் நன்மை தரும் நற்செயல்கள்
நான் பெற்றிருக்கும் வாழ்க்கையை பயனுள்ளதாய் ஆக்கிக் கொள்ள வேண்டும்
நான் பெற்றிருக்கும் வாழ்க்கை இறைவன் தந்த அருளாய் இருக்க அவனைத் தொழுது வாழ வேண்டும்

1 comment:

  1. ஒவ்வொன்றும் தன்னம்பிக்கை தரும் வரிகள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete