Thursday 16 January 2014

நாம் சந்தித்து நீண்ட காலம் ஆகிறது .....

நான் ஒன்றை சிந்தித்தால்.....
நான் சிந்திக்கும் சிந்தனை முதல் சிந்தனையை மறக்கடிக்கிறது
நான் ஒன்றை எழுத நீண்ட நேரம் ஆகிறது .....

நாம் சந்தித்து நீண்ட காலம் ஆகிறது
.....
நாம் ஒருவருக்கொருவர் பார்த்தே நீண்ட காலமானது
நான் பார்பவைகள் அனைத்திலும் நீ இருப்பதாய் தோன்றுகிறது .....



நான் உயிரோடு இருப்பதை உணர்கிறேன்
நான் கொண்டிருக்கும் மனதில் நீ இருந்துக் கொண்டே இருப்பதால்
நான் சோர்வாக இல்லை நீ என் இதயத்தில் குடி இருப்பதால்

இது ஏதோ ஒரு திருப்தியை இன்னும் எனக்கு தருகிறது
இது ஏதோ ஒரு புயலால் அழிந்து போகாமல் இருப்பது உன்னிடத்தில்
அந்த புயல் உன்னிடத்தில் நிலை கொண்டிருப்பதேன் !

நீ ஒரு புயலாய் வராமல்
நீ ஒரு தென்றலாய் வந்து விடு
நம் பயணம் தொடர்ந்து செல்லட்டும் ...

No comments:

Post a Comment