Sunday 16 June 2013

இருட்டில் இருக்கிறது இதயம்


இருட்டில் இருக்கிறது இதயம்
இதயத்தில் இருக்கிறது மூச்சு
முச்சில் இருக்கிறது உயிர்
உயிரில் இருக்கிறது குடும்பம்
குடும்பத்தில் இருக்கிறது பாசம்
பாசத்தில் இருக்கிறது மகிழ்வு
மகிழ்வில் இருக்கிறது வாழ்க்கை
வாழ்கையில் இருக்கிறது நேசம்
நேசத்தில் இருக்கிறது நன்மை
நன்மையில் இருக்கிறது சுவனம்
சுவனத்தில் இருக்கிறது இறைவனது அன்பளிப்பு

இதயம் இருட்டாகிவிட்டதே
இறக்கம் இதயத்தை விட்டு அகன்று விட்டதே
அறிவிலும் இருட்டு சூழ்ந்து விட்டதே
பார்வை குறைந்து  இருட்டாகத் தெரிகின்றதே


இருட்டறையில் ஒளி பெற வேண்டும்
ஒளி பெற விளக்கு வேண்டும்
ஒளி கிடைத்து தூசி தெரிகின்றது
தெரியும் தூசியைத் துடைக்க துடைப்பான்  வேண்டும்
அத்தனையும் கிடைத்து அழுக்கை அகற்ற அறிவுடைமை வேண்டும்
அறிவைக் கிடைக்க கல்வியைப் பெருக்க  வேண்டும்
கல்வி கிடைத்தபின் அதனைப் பயன் படுத்தும் திறன் வேண்டும்
திறன் இருந்தும் செயலில் ஊக்கம் வேண்டும்
இத்தனையும் கிடைத்தாலும் இறைவனது அருளும் வேண்டும்
இறைவனது அருளுக்கு அவனை நன்றியோடு தினம் தொழுதல் வேண்டும்

4 comments:

  1. ஒவ்வொன்றும் எங்கே இருக்கிறது என்று சொன்னவிதம் அருமை... அருமையாக முடித்துள்ளதும் சிறப்பு... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. அன்புள்ள திண்டுக்கல் தனபாலன் அருமையாக ,அன்பாக , கருத்துரைத் தந்து இருள் சூழ்ந்த மனதில் ஒளி தர உற்சாகம் தருவதில் மகிழ்கின்றேன்

    ReplyDelete
  3. Everything is to be in place where they belong. Nice write.

    ReplyDelete
  4. To Arumugam Easwar
    Thank you for your comment
    அன்புடன் நன்றி உங்கள் கருத்துரைக்கு

    ReplyDelete