Monday 10 June 2013

அம்மா என்றழைக்காத உயிரில்லையே.

 அரபு நாட்டில் அக்காலத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை குடிப்பதும், பெண் குழந்தைகள் பிறந்தால் கொன்று புதைப்பதும், சமூக விரோதச் செயல்களும் ஆக்கிரமித்திருந்தது. அரபு நாடுகளில் பெண் குழந்தை பிறந்தால் உயிரோடு புதைத்து விடுவதும் அல்லது கொன்றுவிடும் பழக்கம் இருந்தபோது இறைவனால் இறக்கப்பட்ட வசனம் இவைகள்.

நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.- Qur'an 17:31 திருக்குர்ஆன்-17:31

எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை. - திருக்குர்ஆன் 6:140

 இக் கொடிய பழக்கம் இன்னும் நம் தமிழ் நாட்டிலும் இருப்பதனைப் பார்க்கின்றோம்.
இஸ்லாம் குழந்தை உண்டானபின் அதனை குடும்பக் கட்டுப்பாடு என்ற பெயரில் குழந்தையை அழிப்பதனயும்  வன்மையாக கண்டிக்கின்றது. கரு உண்டானபின்பு குழந்தையின் தாய்க்கோ அல்லது   குழந்தையின் உயிருக்கோ ஆபத்து வரும் நிலை உண்டாகும் போது சில விதிவிலக்கு இருக்க முடியும். குழந்தை உண்டாவதற்கு முன் சில தடுப்பு முறை கையாள்வதில் உண்டாகிக் கொள்ளும் குடும்பக் கட்டுப்பாடு தவறல்ல. (இந்திரியத்தினை உள் செல்ல விடாமல் தடுத்துக் கொள்வது) அது தாயின் உடல்நலம் கருதியாக இருக்கலாம்.
ஆனால் தேவைக்கு பயந்து அதாவது அதிக குழந்தைப் பிறந்தால் கவனிக்க முடியாது என்ற பயத்துடன் குழந்தையைப் பெற வேண்டாம் என்று முடிவுக்கு வருவது மிகவும் பெரிய தவறு.

" நீங்கள் விரும்புகின்ற ஒன்றின்  மூலம் தீங்குகள் இருக்கக்  கூடும்  நீங்கள் வெருப்பவைகளின்  மூலம் உங்களுக்கு நன்மைகள்  இருக்கக் கூடும்" இது இறைவனின் சொல்.

தமிழில்  தர்ஜமதுல் குர்ஆனை    முதன்   முதலில் மொழி பெயர்த்த ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி  அவர்கள் ,ஆ.கா.அ . அப்துஸ் சமது  அவர்களின் தந்தை,  அவர்கள் .ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி.  அவர்களிடம் ஒருவர் சென்று கர்பத்தடையைப்  பற்றி தங்களது கருத்து என்ன  என்று கேட்டாராம் . அதற்கு மதிப்புக்குரிய பாகவி அவர்கள் "இந்த கேள்வியை உன் தகப்பனார் கேட்டிருக்க வேணும் என்று சொன்னார்களாம்" . இதன் பொருள் உன் தந்தை கர்பத்தடையை செய்திருந்தால் இந்த கேள்வி கேட்க இந்த உலகத்திற்கே நீ வந்திருக்க மாட்டாய் என்பதுதான் . யோசனை செய்யுங்கள். நம் தகப்பனாரும்  இதை செய்திருந்தால் நாமும் வந்திருக்க மாட்டோம்

மக்கள் தொகை ஒரு நாட்டுக்கே பெரிய பலம். ஒரு நேரத்தில் சிங்கப்பூர்  பிரதமராக இருந்த லி குவான் யூ  குடும்பக் கட்டுப்பாட்டை  ஆதரித்தார். அதன் விளைவு  நாட்டின் மக்கட் தொகை குறைந்து நாட்டின் வளர்ச்சி குறைய ஆரம்பித்ததை  கண்ட பின் மக்களிடம் முடிந்த அளவில் அதிகமாக  குழந்தையை அதிகமாக பெறுங்கள்  என வேண்டிக் கொண்டார்.
இறைவன் நினைத்தால் ஒரே நேரத்தில் மக்கட் சமுதாயமே அழிந்துவிடும். ஒரு பெரிய அலை வீசினாலே சுனாமி வந்து விடுமோ ஏன்று பயப்படுகின்றோம். இன்னும் எதனையோ அழிவுகளை நாம் பார்க்கின்றோம்.

ஒன்று அல்லது இரண்டு குழந்தை இருக்கும்போது அதற்கு ஒரு உடற்கோளாறு  வந்தால் பயம் நம்மை வந்தடைகின்றது. காரணம் ஒன்று அல்லது இரண்டு  குழந்தைகள் பெற்றவர்களுக்கு ஒரு தெளிவு வருவதில்லை..குழந்தைகள் குறைவாக இருக்கும் போது உழைப்பிலும் குறைவு வருகின்றது. ஒன்று அல்லது இரண்டு  குழந்தை பெற்றவர்களை  விட அதிக குழந்தைகள் பெற்றவர்கள்  சிறப்பாக வாழ்கின்றாகள். அந்த குடும்பத்திற்கு பெரிய குடும்ப உறவும் உண்டாகி மகிழ்வாக இருக்கின்றனர்.
எங்கள் ஊரில் நிறைய குழந்தைகள் பெற்றவர்கள்தான் பெரிய செல்வந்தர்கள். நாம் நினைப்பது நம் திறமையால்தான் அனைத்தும்  கிடைகின்றன என்பது ஒரு மாயை .இறைவன் உதவியும் அதற்கு அவசியமாகின்றது.நம் திறமை ஒரு பகுதிதான்.

தேவைக்கு பயந்து குழந்தையை கொள்ளாதீர்கள்.மக்கள் தொகை பெருக்கத்தினால் நன்மையே விளைந்திருகின்றது

4 comments:

 1. Nice read. This write is a tribute to those who fight against foeticide.

  ReplyDelete
 2. கூறப்பட்டுள்ள உண்மைகள் வருத்தம் என்றாலும், முன்பை விட இந்தக் கொடுமை குறைந்துள்ளது...

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துரைக்கு நன்றி

   Delete