Tuesday 18 June 2013

நதியும் மக்களும் உருவாக்கிய பிரிவுகள்

நதியும் மக்களும் உருவாக்கிய பிரிவுகள்


ஒன்றாக வந்த வற்றாத ஜீவ நதி வளமாக ஆற்றின்  வழி நீர் பெருக்கெடுத்தோடி பல வாய்க்கால்களாக பிரிந்து ஆங்காங்கே உள்ள இடங்களை செழிக்கச் செய்து மக்களுக்கு நன்மை பயக்கின்றது.

ஓடிக்கொண்டேயிருக்கும் ஜீவ நதிக்கு ஓயவில்லை களைப்பில்லை ,ஜீவனாம்சமும் தேவையில்லை,இளைப்பாற இடமும் தேவையில்லை   அதுக்கு தேவை மழை .
   
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே புசியுமாம், தொல்லுலகில்
நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை - ஒளவையார்

ஆணாக ,பெண்ணாக தனியே வந்த மனித படைப்பு ஒற்றுமையாக ஒன்றிணைந்து அதன் பலனால் பல் மக்களாக பெருகி தன்னை சீர் படுத்திக் கொள்ள ஒரு மார்கத்தை கண்டு அதன் வழியே நல்வழி பெற்றோர் தனக்குள் பல ஜாதி ,மதமென பல பிரிவுகளாக்கிக் கொண்டு தன்னையும் அழித்து மக்களுக்கு தீமை பயக்கின்றனர்.


ஆணுக்கு தேவை பெண் வளமாக வாழ.
ஆண்சாதிக்கு தேவை பெண்சாதி

ஆணுக்கு தேவை பெண் வளமாக வாழ

 "சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதிவழுவா நெறிமுறையில் - மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்

பட்டாங் கிலுள்ள படி. " - அவ்வையார்

4 comments:

  1. /// தனக்குள் பல ஜாதி, மதமென பல பிரிவுகளாக்கிக் கொண்டு தன்னையும் அழித்து மக்களுக்கு தீமை பயக்கின்றனர்...///

    அனைவரும் உணர வேண்டிய வரிகள்...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. நன்றி...திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு

    ReplyDelete
  3. Nice write.Like a river a man should go about his way against the odds of life.

    ReplyDelete