Monday 24 June 2013

ஆகாயத்தில் கோட்டை கட்டினேன்

ஆகாயத்தில் கோட்டை கட்டினேன்
ஆகாயத்தில் போன மேகம் கோட்டையை கலைத்து விட்டது

ஆகாயத்தில் இருந்து நண்பர்களை பார்த்தேன்
ஆகாயத்தில் இருந்து பார்த்த நண்பர்கள் பொம்மைகளாய்த் தெரிந்தனர்
ஆகாயத்தில் இருந்ததால் நண்பர்கள் தெரியாததால் தரைக்கு வந்தேன்
ஆகாயத்தில் இருந்து தரைக்கு வர  நண்பர்கள் தெரிய மனம் விட்டு பேசி மகிழ்ந்தேன்

கடற்கரையில் காதலிக்கு காத்திருக்க நேரம் பெரிதானது
கடற்கரையில் காதலி வரும்வரை காதலியைப் போல் பதுமை செய்தேன்
கடலின் அலைகள் பதுமையை கரைத்துச் சென்றன
உப்பினால் கட்டிய பதுமை மழை பெய்ய கரைவதுபோல்

உயர்ந்த மனமும் தாழ்ந்த மனமும் ஒன்றிணைந்து நட்புக்கு உயர்வைத் தராது
காணாத காதலி மனம் விட்டு கரைந்து போவாள்
காதலும் நட்பும் தொடர்ந்து பழகி நிற்க
பூத்த மலரின் மலரின் மணம் வீச மனதில் நிற்கும்

பார்வையை விட்டு தொடர்ந்து அகல இதயத்தில் விட்டு அகலும் நிலையாகும்
விழிகளின் பார்வை கெட கண்களின் பாவை பாதித்தது
விரும்பியவர்  போன இடம் பார்த்து  பலகாலம்  நின்றதால் பாவையின் காட்சி குறைந்தது
விரும்பியவர் வந்து போக மனதில் அவரது பிம்பம் நிலையாய் நிற்கின்றது   


4 comments:

  1. காதலும் நட்பும் தொடர்ந்தால், வாழ்வு முழுவதும் வசந்தம் தான்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கருத்துரைக்கு நன்றி .வாழ்த்துகள் திண்டுக்கல் தனபாலன் அவர்களே

    ReplyDelete
  3. Love & friendship are always like plants; they need to be tended.

    ReplyDelete
  4. @ Arumugam Easwar
    Thank you for your visit and comment

    ReplyDelete