Saturday 22 June 2013

மகிழ்வைத் தருவதாக சொல்லி விற்பவர்கள் மயக்கம் தருபவர்கள்.


மகிழ்வைத் தருவதாக சொல்லி விற்பவர்கள்  மயக்கம் தருபவர்கள்
மகிழ்வு கடைத்தெருவில் வாங்கும் பொருளல்ல

பெற்றோர் பாசம் காட்ட மகிழ்வு வருகிறது
பெற்றோர் கண்டிக்க  மகிழ்வு மறைகிறது

வேலை கிடைக்க மகிழ்வு
வேலையின்  கடுமை வர மகிழ்வில் தொய்வு

காதலிக்கும்போது மகிழ்வாய் தோன்றுகிறது
கல்யாணமானபின் மகிழ்வு வரும் போகும்

நினைத்தது கிடைக்க மகிழ்வு
கிடைத்தது கை விட்டுப் போக மகிழ்வு மறைகிறது

மகிழ்வு ஒரு செயலல்ல
மகிழ்வு செயலின் முடிவாகும்

களிப்பான நினைவு மகிழ்வான மனது
கவலையான நினைவு கனமான மனது

கடந்த காலம் மகிழ்வானதாய் நிற்க
நிகழும் காலம் சோகத்தில் மூழ்வதேன்

பிறக்கும் போதும் கையில் ஒன்றுமில்லை
இறக்கும் போதும் கையில் ஒன்றுமில்லை

பணம் வாழ்வில் வசதியைத் தந்தது
பணம் வாழ்வில் மகிழ்வைத் தரவில்லை

மகிழ்வு மனதைச் சார்ந்தது
மகிழ்வு வசதியைச் சார்ந்ததல்ல


செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத்(துறத்தல்) எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

4 comments:

  1. நல்லது..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. We can't buy happiness with money. Those who care for comforts of life will always like to sleep with money.

    ReplyDelete
  3. அன்புடன் நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு

    ReplyDelete
  4. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் அன்புடன் நன்றி Arumugam Easwar அவர்களுக்கு

    ReplyDelete