Saturday 31 August 2013

மருத்துவரின் சேவை மரியாதைக்குரியது


பண்டைய காலங்களில் இருந்து மருத்துவர்களுக்கு மரியாதை வழங்கப்படுகிறது.
மருத்துவர்கள் நமது உடல் நலம் பாதிக்கப்பட்டால் நம் உடல் நலத்திற்கு தேவையான ஆலோசனை தருகிறார்கள்.
மருத்துவர் ஆலோசனை இல்லாமல் நாமே மருந்துகளை வாங்கி சாப்பிடக்
கூடாது , தேவையற்ற நிலையில் அடிக்கடி ஆண்டிபயோடிக் (கிருமிக் கொல்லி நாசினி )மருந்துகளை எடுத்துக் கொள்வதால் இயற்கையாக உருவாகும் உடலின் எதிர்ப்பு சக்தியை  குறைந்துவிடும் .வளர்ந்த நாடுகளில் ஆண்டிபயோடிக் மருந்துகளை மிகவும் அவசியம் கருதினால்தான் கொடுப்பார்கள்
நாம் மருதுவரிடம் 'ஊசி ' போடும்படி நாமே கேட்கிறோம் .நல்ல மருத்துவர் வியாதிக்கு தேவையானதைத்தான் செய்வார்.
மருந்து சாப்பிட முடியாதவருக்கும் ,மயக்க நிலையில் உள்ளவருக்கும் அவசர தேவைக்கும் சதை வழி அல்லது நரம்பு வழி மருந்து செலுத்துதல் அவசியமாகின்றது .
மருத்துவரிடம்  நம் உடல் நலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை நாம் மறைத்துப் பேசக் கூடாது ..
மருத்துவரை தேவையில்லாமல் மாற்றிக் கொண்டே இருக்கக் கூடாது.
நாம் நமெக்கென ஒரு சிறந்த மருத்துவரை குடும்ப மருத்துவராக அமைத்துக் கொள்ள வேண்டும் .அவ்வாறு இருந்தால் நமது உடலைப் பற்றிய நிலைமை அவருக்கு நன்றாக தெரிந்திருக்கும் . இதனால் தேவையற்ற பரிசோதனைகளை செய்ய வேண்டிய அவசியம் குறையும்.
நம்பிக்கை மருத்துவம் செய்துக் கொள்வதற்கு அடித்தளமாக உள்ளது .
தொழிலிலேயே ஒரு உயர்வான் தொழிலாக மருத்துவத் தொழில் உள்ளது. இது சேவையின் அடிப்படையில் அமையப்பட்டது.

1 comment:

  1. நல்ல மருத்துவர் வியாதிக்கு தேவையானதைத்தான் செய்வார். மருத்துவரை தேவையில்லாமல் மாற்றிக் கொண்டே இருக்கக் கூடாது. அனைவரும் அறிந்திருக்க வேண்டிய குறிப்புகள்.

    ReplyDelete