Friday 2 August 2013

வார்த்தையால் பேசிவிடு! நேசத்தை காட்டிவிடு!

உந்தன் விழிகள் பேசுகின்றன
உந்தன் உதடுகள் அசையவில்லை

உனது விழிகளில் கண்ணீர் வழிகின்றது
உனது மென்மையான இதயம் கனத்திருப்பதால்

உனது இதயம் இறுக்கமான போதும்
உனது மனம் இரக்கத்தை காட்டுகின்றதோ !

உன் உதட்டின் இதழ்கள் நெருக்கமாக இருந்தும் மனதை கவருகின்றது
உன் மனதின் வலி உன் முகத்தில் தெரிய என் மனமும் வலிக்கின்றது

ரோஜாவின் இதழ்கள் நெருக்கமாக இருந்து அழகைத் தந்தாலும்
ரோஜா மலர்ந்து இதழ்கள் விரிந்தாலும் வெயிலின் கொடுமையால் சுருங்கி கொட்டிவிடும்

மலர்ந்திருக்கும் ரோஜாவை பறித்து முடியில் சூட்டிக் கொள்
மனதில் மகிழ்ச்சி வர உன் இதழ்கள் திறக்க மனம் மகிழ்வாய்

நெருக்கமாக வந்து இறுக்கமாக என்னைப் பிடித்துக் கொள்
நெருக்கத்தில் நழுவாது உன்னை அன்பால் அரவனைப்பேன்

அன்பின் ஆழம் உன் மனதின் இறுக்கத்தைப் போக்கிவிடும்
அன்பின் அரவணைப்பு உன்னை மகிழ்வாய் மாற்றிவிடும்

2 comments:

  1. அன்பே அனைத்தும்... இணைக்கப்பட்ட படமும் ஆயிரம் கருத்துக்கள் சொல்கின்றன... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Nice write. Like every word of the poetry.

    ReplyDelete