Thursday 1 August 2013

நீ விரும்பியபோது உன்னிடத்தில் உயர்வாய் அழைத்துக்கொள்!


ஒரே வாழ்க்கை இவ்வுலகில் தந்தாய்
ஒரே வாழ்வில் உயர்வும் தாழ்வும் மாறச் செய்தாய்

உயர்வு வரும் நிலையில் உனை மறந்தேன்
உயர்வு வருவது என் உழைப்பால் வந்ததாக கர்வம் கொண்டேன்

தாழ்வு வரும் நிலையில் விதியால் வந்த வினையாக நினைத்தேன்
தாழ்வு வந்த போது உனைநினைத்து உளமார உன்னுதவி நாடினேன்

'உயர்வு வந்த போது எனை மறந்தாயே' என என் வேண்டுதலை நீ நிகாரிக்கவில்லை
உயர்வு நிலையில் உள்ள உனக்கு சிறிய மனமில்லை

உனை நாடுவோர்க்கும் உனை நாடாதோர்க்கும் இவ்வுலகில் உன்னருள் கிட்டும்
உனை நாடி உன் வழி நடந்தோர்க்கு மட்டும் சுவனம் கிட்டும்


அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த தீவினைகள் தீயால் சுட்டதாய் உணர்கிறேன்
அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பிழைகளை பொறுத்தருள்வாய்!

இவ்வுலகில் பட்ட தீப்புண் காய்ந்து நலம் பெறலாம் அதற்கும் உன்னருள் வேண்டும்
அவ்வுலகில் இவ்வுலகில் செய்த தவறால் நீ மன்னிக்காமல் போனால் நான் படும் துன்பத்திற்கு அளவில்லை

நீ மன்னிக்கும் மனமுடையவன்
நீ மன்னிப்புத் தருபதை விரும்புபவன்

உனை விடுத்து நான் யாரிடம் மன்னிப்பு தேட முடியும்
உனை விடுத்து நான் யாரிடம் உன்னருள் நாட முடியும்

செய்த பாவங்களுக்கு இவ்வுலகில் நான் பட்ட துயரங்கள் போதும்
செய்த பாவங்களுக்கு உன்னிடம் உளமுருகி மன்னிப்பை நாடுகின்றேன்

இனியொரு போதும் எத்தவரும் என்னிடன் நெருங்கா நிலை நாடி நிற்கின்றேன்
பணிவோடு உன்னருள் கொண்டு என் பாவக் கரையை அழித்து உன்னருள் கொடுத்து உன்னிடம் நீ விரும்பியபோது உன்னிடத்தில் உயர்வாய் அழைத்துக்கொள்

2 comments:

  1. /// அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த தீவினைகள் தீயால் சுட்டதாய் உணர்கிறேன்... ///


    unara vendiya varikal....

    ReplyDelete