Saturday 31 August 2013

நான் தனித்து விடப்பட்டவனாக உணர்கிறேன்


அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.

இறைவா! நீ தனித்தவன் இதனை யாரும் அறிவார்
இறைவா! நான் தனித்து விடப்பட்டவனாக உணர்கிறேன்
இறைவா ! நீ அருளாளன் கருணை மிக்கவன்
இறைவா ! நான் உன்னருள் நாடி யாசிக்கிறேன் ,உன் அருள் நாடி நிற்கிறேன்
இறைவா ! நான் நல்லது ,கெட்டது அறிந்துக் கொள்ளும் ஆற்றலைத் நீ தந்து விடு!
இறைவா ! ஞானத்தை தந்து நன்மையான வழியில் வாழச் செய்துவிடு
இறைவா ! நான் தவறு செய்தால் அது எனது அறியாமையால் வந்த வினை
இறைவா ! நான் நன்மை செய்திருந்தால் உன் கருணையின் வெளிப்பாடு
இறைவா ! நீ விரும்பியபோது என்னை அழைத்துக் கொள்
இறைவா ! நான் உன்னிடம் வரும்போது நன்மையுடன் வரவேண்டும்
இறைவா !அனைத்தையும் நீதான் கொடுத்தாய்
இறைவா ! நன்மை ,தீமை பகுத்தறியும் திறனையும் நீதான் கொடுத்தாய்
இறைவா ! தீயோர் திரண்டு நிற்கும் நின்றதால் என்னை யறியாமல் தீமைகள் என்னிடம் வந்திருந்தால் மன்னித்துவிடு
இறைவா !உன் அருள் மழைவேண்டிஇறைஞ்சுகின்றேன் .

1 comment:

  1. நான் நல்லது ,கெட்டது அறிந்துக் கொள்ளும் ஆற்றலைத் நீ தந்து விடு!
    ஞானத்தை தந்து நன்மையான வழியில் வாழச் செய்துவிடு
    நியாயமான வேண்டுதல்கள்.

    ReplyDelete