Friday 23 August 2013

தேடும் இடத்தில இருந்துக் கொண்டே தேடுகிறோம்

தேடல் தேவை
தேடலுக்கு ஓர் இடம் இது
தேடலுக்கு மனது தேவை
தேடியதும் கிடைக்கும்
தேடாததும் கிடைக்கும்
தேடிய இடத்தில இருந்துக் கொண்டே தேடுகிறோம்
தேடியதில் நல்லவை நம்மிடம் கிடைக்கும்
தேடியதில் தகாதவை தானே மறையும்
தேடியதில் ஒரு பொறி கிடைக்கும்
தேடிய பொறியை பெருமைப் படுத்தி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
தேடிப் பயன்படுத்தியதை மற்றவர் பயன்பட வைக்க வேண்டும்
தேடிக் கிடைத்தது சிறிதுதான் அதுவே பெருமைப்பட பெரிதாக்கிவிட வேண்டும்

இறைவன் யாரையும் ஒரே மாதிரி படைக்கவில்லை
இறைவன் பல் வகையில் படைத்தது நாம் அடையாளம் அறிவதற்காக
இறைவன் கொடுத்த அறிவும் பல்வகைப் பட்டது
இறைவன் ஒருவனுக்கு கொடுத்த அறிவு பலருக்கு பயன்படுகின்றது
இறைவன் தந்த பல் வகை மனிதர்களையும் அவர்கள் தரும் பல் வகை அறிவும் இங்கே காணக் கிடைக்கிறது.
இறைவன் ஒருவனுக்கு முகநூலைத் தந்தான்
இறைவன் தந்த அந்த ஒருவன் பல முகநூலைப் பார்த்து படிக்க வைத்தான்

எங்கோ இருக்கும் ஒருவன் உன்னை உயர்த்தும் வழி வகுத்தான்
எங்கோ இருக்கும் பலர் உன்னை அறிய வழியை வகுத்துக் கொடுத்தான்

அனைத்தும் அறிந்த இறைவன் உன் தேடுதல் திறமையை உன்னிடம் விடுத்தான்
உன்னையே நீ அறிய வாய்ப்பு கிடைத்த பின் தேடுதல் திறனை தடை போட்டு நிறுத்தி விடாதே

உங்கள் தேடுதலை எளிமைப் படுத்த உதவும் முக்கிய இணையதளங்கள் ...

2 comments:

  1. தேடிக் கிடைத்தது சிறிதுதான் அதுவே பெருமைப்பட பெரிதாக்கிவிட வேண்டும்....

    சூப்பர்...!

    ReplyDelete
  2. "தேடிப் பயன்படுத்தியதை மற்றவர் பயன்பட வைக்க வேண்டும்
    தேடிக் கிடைத்தது சிறிதுதான் அதுவே பெருமைப்பட பெரிதாக்கிவிட வேண்டும்"
    அருமையான அழகிய வரிகள்

    ReplyDelete