Tuesday 30 July 2013

இறைவன் மீது நம்பிக்கை நிலையாக நிற்கட்டும்.

நடக்குமென்று நினைத்தது நடக்கவில்லை
நம்பிக்கை வைத்து செயல்படவில்ல

நம்பிக்கை என்மீதுமில்லை
நம்பிக்கை இறைவன் மீதுமில்லை

நடக்காமல் போனதும் நன்மையானது
நடக்காததற்கு நானே காரணம் என மனம் சொன்னது

நடந்தாலும் நல்லது ,நடக்காவிட்டாலும் நல்லது
நடப்பது நடக்காது அனைத்தையும் இறைவன் நன்மையாக்கினான்

இறைவன் மீது நம்பிக்கையை வைக்காமல் போனது பாவமானது
இறைவன் மீது வைத்த நம்பிக்கை உந்துதல் சக்தியை தந்து உயர்வானது

பாசம் பரவலானது செயல் விசாலமானது
பாசத்துடன் செய்வது அனைத்தும் இறைவனுக்கானது
நாயகம் கொண்ட நம்பிக்கை இறைவன்மீது

சிலர் கொண்ட நம்பிக்கை அதிசியத்தின் மீது
விண்மீன்கள் நகர்வது இறைவனின் நாட்டம்
விண்மீன்களை வைத்து இவர் பணம் பண்ணுவது அதிர்ஸ்டத்தை சொல்லி
கிரகணங்கள் நிகழ்வதால் மனிதனின் நிகழ்வுகள் மாறுமோ!
வைரத்தை வகையாகப் பிரித்து அதில் அதிர்ஸ்டத்தை புகுத்துவார்
அமைதியும் ஆற்றலும் நம்மிடமிருக்க நட்டாற்றில் விடுபவரை நாடுவது ஏன்?
அறிவின் ஆற்றல், உழைப்பின் உயர்வு உம்மோடு உயர்ந்து நிற்க மாயைகள் மீது பிடிப்பு ஏன்?
தாங்காத உள்ளம் தளர்ச்சியைத் தூண்டும்!
தற்காலிகமானதை நிலையாக்கிக் கொள்ளும் முடிவு ஏன்?
தவறு தற்காலிகமானதாகப் போகட்டும்

இறைவன் மீது நம்பிக்கை நிலையாக நிற்கட்டும்

நம்பிக்கை செயலின் தொடக்கம்
நம்பிக்கை செயலின் ஊக்கம்
நம்பிக்கை தான் வாழ்க்கை
நம்பினோர் கெடுவதில்லை என்பது சான்றோர் சொல்
நம்பிக்கையற்ற செயல் தோல்வியே
நம்பிக்கை நற்காரியத்தின் செயல்பாட்டின் மீது இருக்கட்டும்
நம்பிக்கையற்ற மார்க்கத்தின் செயல்பாடு வீண்
இறைவன் மீது வைத்த நம்பிக்கை நம் மீது வைத்த நம்பிக்கையாகும்

2 comments:

  1. /// உந்துதல் சக்தியை தந்து உயர்வானது...///

    உயர்வான வரிகள் பல... பாராட்டுக்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Nice write as usual. Thoughts that you express here are really inspiring. Yes, I believe in god, I have faith on Him.

    ReplyDelete