Monday, 31 March 2014

சேவையை குறிக்கோளாகக் கொண்ட தொழில்

Service- oriented business
Business oriented service


சேவையை குறிக்கோளாகக் கொண்ட தொழில்
ஆதாயத்தை குறிக்கோளாகக் கொண்ட தொழில்

மக்கள் தேவையானதை தேடி அங்கும் இங்கும் அலையாமல் மக்களுக்கு தேவையானதை சேர்த்து ஓரிடத்தில் கொடுக்கும் சேவை மனதோடு செய்யும் தொழிலில் மக்கள் கொடுக்கும் சிறிய லாபம் தொழில் செய்வோருக்கு ஆதாயத்துடன் நன்மையையும் சேர்ந்து விடுகின்றது சேவை மனது அதில் இருப்பதால் .

“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!”


ஆளுமை சக்தி பெற்றதாய் நினைப்போர்
ஆணவ புத்தி பெற்று களிக்கின்றனர்

மானம் போக ஆணவம் அடங்கும்
போன இடம் அறியாமல் இருளில் மூழ்குவர்

வேண்டாம் இந்த வீணான விளம்பரம்
வேண்டியவர் இருந்த இடம் விட்டு அகல்வர்

உம்மையே நீர் அறிந்தால்
உமக்கோர் உண்மை விளங்கும்

ஓரிடம் உண்மையின் உறைவிடம்
ஓதி உம்மை அறிய  ஓரிடம்

உமை ஒளி பெறச் செய்யும் ஓரிடம்
உமக்குள் உள்ளதனை நீர் அறிவீர்

என்னேரமும் இறைவனை நேசித்து
இயன்றதனை செவ்வனே செய்வீர்

Saturday, 29 March 2014

இறையருள் நாடி இறைவனை இறைஞ்சி வாழ்வோம்!

இறைவன் இட்ட கடமையை நிறைவேற்றுவோம்

இறைவன் கொடுத்த மறைவழி வாழ்ந்து நிற்போம்

இறைநபி வாழ்ந்த வழி நம் வாழ்வின் வழியாகும்

இறையருள் நாடி இறைவனை இறைஞ்சி வாழ்வோம்

இறையருள் நாட நேரம் ஒதுக்க வேண்டாம்

இருக்கும் நேரமெல்லாம் இறையருள் நாடும் நேரமாகும்

இறையருள் கேட்க இறைமறை சொற்களே உய்ர்வானதாம்

இறையருள் கேட்க்கும் பொழுதினிலே இயல்பாய் இருத்தல் சிறப்பாகும்

இறையருள் கேட்க மனனம் செய்து வேண்டுதல் செயற்கையாய் இருந்துவிடும்

Friday, 28 March 2014

நான் உன் பார்வையில் இல்லாமல் இல்லை

இறைவா எனக்கு மன்னிப்பை வழங்கிடு
நிறைவாய் நான் உன்னை பிரார்த்தித்து இறைஞ்சுகிறேன்

நான் என் வாழ்நாட்களில் நல்லது செய்யவில்லை
நான் உன்னை நினையாமல் நல்லது செய்ய விடுத்தேன்
நான் வேண்டுமென்றே அனைத்தும் செய்யவில்லை
நான் செய்தவைகள் அறிந்தும் அறியாமலும் செய்தவைகள்
நான் செய்தவைகள் அனைத்தும் நீ அறிந்துக் கொள்வாய் என அறியாமல் போனேன்
நான் சென்ற தவறான வழிகள் அறிந்து இறுதியாக உன் வழி நாடி நிற்கின்றேன்
நான் கேட்கும் ஒரு வாய்ப்பு நல்லது செய்ய வேண்டி
நான் வேண்டுதல் கேட்டு உன்னிடம் நிற்கின்றேன்

பாராட்டாதவன் பாராட்டப்பட தகுதி இல்லாமல் போய் விடுவான்

நீ என்னை பாராட்டு நான் உன்னை பாராட்டுகின்றேன்! இது சொல்லாமல் சொல்லும் வேண்டுதல். இதனை சிலர் முன்பே திட்டமிட்டும் செயல்படுவர். உன்னை ஒருவர் உன் பேச்சுத் திறமைக்காக பேச அழைப்பார். அழைத்தவரை பாராட்டவேண்டுமல்லவா! அதோடு நிறுத்தி விட்டால் நல்லதல்ல மேடையில் உள்ளவரையும் மற்றவரையும் பாராட்ட வேண்டும். பாராட்டுதலினாலேயே அவர்கள் மயங்க வேண்டும் அது சிறிது நேரம் அதிகமானால் கேட்க வந்தவர்கள் அந்த இடத்திலேயே தூங்கிவிட வேண்டும் அல்லது அந்த நேரத்தில் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேச வாய்ப்பு கிடைக்க வேண்டும் அல்லது இடைவேளை கிடைத்து விட்டதாக முடிவு செய்து வெளியில் சென்று தேவையானதை முடித்து விட்டு வரவேண்டும்.

வேண்டுதல்

வேண்டுபவருக்கும் தருபவன்
வேண்டாதபவருக்கும் தருபவன்

வேண்டியது கிடைத்தாலும் நன்மையின் பொருட்டே
வேண்டியது கிடைக்கவில்லை யெனினும் நன்மையின் பொருட்டே

வேண்டியது உடனேயும் கிடைக்கலாம்
வேண்டியது காலம் தாழ்ந்தும் கிடைக்கலாம்

வேண்டியதை கேட்பதும் தேவை அற்றவனிடம் இருத்தல் வேண்டும்
வேண்டாதவைகளை தவிர்க்க வேண்டி கேட்பதும் தேவை அற்றவனாக இருத்தல் வேண்டும்

வேண்டுபவன் 'வேண்டுதல் வேண்டாமை இலானான' இறைவனாகத்தான் இருக்க முடியும்

'வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல'

விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனை தொழுபவருக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை.

இறைநம்பிக்கை அற்றவன் என்று பெருமை பேசுவார்
'வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல' என்ற குறளை மேன்மையாக
பெருமை படுத்தி இயம்புவார்
#வேண்டுதல்

Thursday, 27 March 2014

என் நினைவில் எப்போதும் என் தாய்


மனதில் ஒரு வலி,

இப்பொழுது எனது தாய் இறைவனிடத்தில்
இன்னும் நான் ஒரு தாய்க்கு பிறந்த பிள்ளை ..

காலங்கள் கடந்து விட்டன
நான் சில பிள்ளைகளுக்கு தாய்
தயாகியும் என் தாய் என் இதயத்தில்
நான் என் குழந்தைகளுக்கு கொடுத்த முதல் முத்தம் நினைவிலில்லை
எனக்குத் தெரிந்து என் தாய் எனக்கு கொடுத்த முதல் முத்தம் இன்னும் என் நினைவில்

தாயை நினைத்து மனதில் துடிப்பு
என் இதயத்தில் எப்போதும் என் தாய் நினைப்பு
என் தாயை நான் மறக்க முடியுமா !

என் நினைவில் எப்போதும் என் தாய்
என் தாயை திரும்ப என்னிடம் கொடு இறைவா என்று கேட்பதில்லை
என் தாயை சுவனத்தில் இருக்கச் செய்து நீ என்னை உன்னிடம் அழைக்கும்போது
என் தாயோடு என்னை இருக்கச் செய்து விடு என்று வேண்டாத நாளில்லை