Monday 31 March 2014

சேவையை குறிக்கோளாகக் கொண்ட தொழில்

Service- oriented business
Business oriented service


சேவையை குறிக்கோளாகக் கொண்ட தொழில்
ஆதாயத்தை குறிக்கோளாகக் கொண்ட தொழில்

மக்கள் தேவையானதை தேடி அங்கும் இங்கும் அலையாமல் மக்களுக்கு தேவையானதை சேர்த்து ஓரிடத்தில் கொடுக்கும் சேவை மனதோடு செய்யும் தொழிலில் மக்கள் கொடுக்கும் சிறிய லாபம் தொழில் செய்வோருக்கு ஆதாயத்துடன் நன்மையையும் சேர்ந்து விடுகின்றது சேவை மனது அதில் இருப்பதால் .

லாபத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட தொழிலில் நன்மை இல்லை
சேவை மனதுடன் கொண்ட தொழிலில் நன்மை உண்டு

பணம் கிடைக்கும் என்ற நோக்கோடு தொழ வைப்பதில் இறை அருளுமில்லை நன்மையும் இல்லை

இறை அருளும் அதனால் நன்மையும் கிடைக்கும் என்ற மனதோடு தொழ வைப்பவருக்கு கிடைக்கும் சம்பளம் வாழ்வை நடத்த இறைவனால் கொடுக்கப் பட்ட தொகை

குர்ஆனை மனனம் செய்தால் இறையருள் உண்டு என்ற நம்பிக்கையோடுதான் செயல்படுவர்
குர்ஆனை மனனம் செய்தால் நோன்பு காலத்தில் தொழ வைக்க அழைத்து பெரும் தொகை கிடைக்குமென
யாரும் மனனம் செய்வதில்லை .
மக்கள் விருப்பப் பட்டு கொடுக்கும் சன்மானத் தொகை இறையருளோடு நன்மையும் சேர்ந்து வருகிறது

ஒரு தொழில் தொடர்ந்து செயல் பட ஆதாயம் இருக்கத் தான் வேண்டும்
ஆதாயம் இல்லையெனில் அத் தொழில் அழிந்து விடும் .
நல்லவர் செய்யும்,நன்மையை நாடி நடத்தும் தொழில் அல்லது வேலை தொடர்ந்து நடைபெற அதற்குரிய ஆதாயம் கிடைக்க வேண்டும் .நாமும் அதற்கு ஊக்கம் கொடுக்க வேண்டும் .

நன்கொடை வாங்கி நடத்தும் கல்விக் கூடங்களும் தொழில் மயமாக்கப் பட்டு விட்டது
கல்விக் கூடங்கள் சிறிய தொகை வசூளிப்பது தவறில்லை. கல்விக் கூடங்கள் நடத்துவதற்கும் அதனை அபிவிருத்தி செய்வதற்க்கும் அத் தொகை உதவும்

No comments:

Post a Comment