Monday, 31 March 2014
“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!”
ஆளுமை சக்தி பெற்றதாய் நினைப்போர்
ஆணவ புத்தி பெற்று களிக்கின்றனர்
மானம் போக ஆணவம் அடங்கும்
போன இடம் அறியாமல் இருளில் மூழ்குவர்
வேண்டாம் இந்த வீணான விளம்பரம்
வேண்டியவர் இருந்த இடம் விட்டு அகல்வர்
உம்மையே நீர் அறிந்தால்
உமக்கோர் உண்மை விளங்கும்
ஓரிடம் உண்மையின் உறைவிடம்
ஓதி உம்மை அறிய ஓரிடம்
உமை ஒளி பெறச் செய்யும் ஓரிடம்
உமக்குள் உள்ளதனை நீர் அறிவீர்
என்னேரமும் இறைவனை நேசித்து
இயன்றதனை செவ்வனே செய்வீர்
துன்பம் வர துவளா நிலை வேண்டும்
இன்பம் வர குதியா நிலை வேண்டும்
இரு நிலையிலும் பொறுமை காண
இதயமெனும் இருட் கோட்டையை
இறைவனிடம் இதயத்தை ஒப்படைப்பின்
இதயத்தின் இருள் மறைய
இதயத்தில் ஒளி வீசும்
முகம்மதுவை முன்னிலைத் தலைவராய்
முன்னிறுத்தி முயற்சியை கையாள்வீர்
என்னிலையிலும் இடர்களை தவிர்பீர்
அறிவின் ஒளி நிறைவு பெற நிறைவடைவீர்
-------------------------------------------------------------
இறைவனது பெயரை செப்பித் துவங்கி
"ரப்பி ஜித்னி இல்மா"( رَّبِّ زِدْنِي عِلْمًا என்ற துதி பாடி
“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!”
எனச் சொல்லச் சொல்ல கற்றது மனதில் பதியும்
பெற்ற அறிவு பொறுமையைத் தரும்
பெற்ற அறிவு பெருமையைத் தரும்
பெற்ற அறிவு பல்கிப் பெருகும்
ஆண்டவன் நினைவு மனதில் நிலைத்து நிற்கும்
ஆணவம் அடங்கி மங்கிப் போகும்
இறைவனைத் தொழு
இருலோகப் பயனைப் பெற்றிடு
----------------------------------------------------------------------------------------------
“(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்;
- குர்ஆன் 2:32.
فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ ۗ وَلَا تَعْجَلْ بِالْقُرْآنِ مِن قَبْلِ أَن يُقْضَىٰ إِلَيْكَ وَحْيُهُ ۖ وَقُل رَّبِّ زِدْنِي عِلْمًا
ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; “இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!
- குர்ஆன் 20:114.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment