Sunday 30 June 2013

பெண்சாதி பன்மையாக இருக்க முடியாது

போட்டி போட்டு முன்னேறு
போட்டி போடவேண்டியதில் போட்டி போடு
போட்டிக்காக போட்டி வேண்டாம்
போட்டி போடுவதில் குறிக்கோள் வேண்டும்
போட்டி போடுவது திறமையை வளர்த்துக் கொள்ள
போட்டி போட்டு பரிசுகளை அள்ளிக் கொள்ள
போட்டி போடுவது பெருமையை நாடி அல்ல
போட்டியில் வெற்றி கொண்டால் கர்வம் கொள்ளாதே
போட்டி போடுவது மற்றவரை வீழ்த்த அல்ல
போட்டி போடுவது நாம் வெற்றி அடைய
போட்டியின் வெற்றி நிலையானதல்ல

போட்டியில் தோற்றால் துவண்டு விடாதே
போட்டியில் வேகமும் விவேகமும் வேண்டும்
போட்டியில் வெற்றி கொள்ள வெறி வேண்டாம்
போட்டியில் அச்சம் அடைய  வேண்டாம்
போட்டியின் அனுபவம்  நம் நிலை அறிய வைக்கும்
போட்டியின் தோல்வி ஆளுமைக்கு வழிகாட்டி
போட்டியின் தோல்வி மனோபலத்தின் எடைக் கல்

பேச்சுப் போட்டியின் முடிவு தர்க்கத்தின் வெற்றி அல்ல
பேச்சுப் போட்டியின் முடிவு விவாதத்தின் விளக்கம்
பேச்சுப் போட்டி வெற்றி கொண்டாட அல்ல
பேச்சுப் போட்டியின் வென்றதால் இறுமாப்பு வேண்டாம்
பேச்சுப் போட்டியில் அனைவர் பங்கும் அதில் அடங்கும்
பேச்சுப் போட்டியில் அனைத்துக் கருத்தும் உடன்பாடாகிவிட முடியாது

அறிவுக்கான போட்டி நம் அறிவை வளர்க்கும்
விளையாட்டுக்கான போட்டி நம் உடல்நலத்தை வளர்க்கும்
மூளை பயிற்சி அறிவை வளர்க்கும்
உடற்பயிற்சி உடல்நலத்தை வளர்க்கும்
பணத்தை சேர்க்கும் போட்டியில் அடுத்தவரை வீழ்த்தும் குறிக்கோள் வேண்டாம்
நன்மை சேர்க்கும் போட்டியில் அடுத்தவரை சேர்த்துக் கொள்
இறைவணக்கத்தில் போட்டி இல்லை இறைவணக்கத்தில்  ஈடுபாடு வேண்டும்



ஜாதிகள் இல்லையென்று சொல்வோர் சொல்லட்டும்
ஜாதியைச் சொல்லி அழைத்தால் தண்டனை இருந்தும்
ஜாதிகள் இல்லாமல் போய்விட்டதா?
ஜாதிக்காக ஒரு மந்திரி
ஜாதிக்கு ஒரு தொகுதி வீட்டுக் கொடுத்தல்
ஜாதியை உண்டாக்கி தான் வளர்ந்தோர்
ஜாதியில் மேல் ஜாதி மற்றும் கீழ்ஜாதி
ஜாதி வேண்டாம் ஆனால் ஜாதி அடிப்படையில் அனைத்தும் வேண்டும்!
வேலையில் சேர்க்க பள்ளிக் கூடத்தில்  சேர்க்க மதம் அல்லது ஜாதிப் பெயர்

"ஜாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம் - பாப்பா"-பாரதியார்
பாரதி பாப்பாவுக்கா பாடினார் !

ஜாதி பெயர் சொல்லி அழைத்தால் சிலருக்கு கோபம் வரும்
ஜாதி பெயர் சொல்லி அழைத்தால் சிலருக்கு பெருமை வரும்

ஜாதி பன்மையாக இருக்கலாம் அது ஆண் ஜாதி
ஜாதி பன்மையாக இருக்க முடியாது அது பெண்சாதி

'என் பெண்சாதி' என்று பெருமைக் கொள்வோர்
'பெண் ஜாதிக் குணமே இப்படித்தான்' என்று வசைபாடுவார்

உயர்தினையில் ஜாதியைப் பிரித்தோர்
உயர்தினையில் ஜாதியைப் பிரித்தது தான் மட்டும் வளர

அஃறினையில் ஜாதியைப் பிரித்தது பொருட்களின் விவரமறிய
அஃறினை யிலும் ஜாதியைப் பிரித்தார்

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பெருமை பேசும் தமிழர்  பண்பாடு போனதெங்கே!

3 comments:

  1. சரியான போட்டி... பாராட்டுக்கள்...

    ஜாதி - முடிவில் சிந்திக்க வேண்டிய கேள்வி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. @ திண்டுக்கல் தனபாலன்
    நன்றி
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete