Tuesday 2 July 2013

நாட்டுக்கு நாடு உண்ணும் உணவில் மாற்றம் !

காலை உணவின் முக்கியத்துவம் அறியாமல் இருப்பது ஏன்?
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் மகாகவி ...
இறைவன் தந்த அந்த அருட்கொடையான உணவை நாம் அவசர கோலத்தில் சாப்பிடுகின்றோம் . பல இறக்குமதிகளில் 'பாஸ்ட் புட்' ஒன்றாக சேர்ந்துக் கொண்டது. நொறுங்கத் தின்றால் நூறு  வயது வாழ்வார் என்பது ஆன்றோர் மொழி . மென்று தின்றால் தேவையான உமிழ்நீர் உண்டாகி நமது உணவை நன்கு செரிக்கச் செய்கின்றது. நாமும் உணவு சாப்பிடும் போது இது இறைவனால் கொடுக்கப்பட்டது என அவனுக்கு நன்றி செலுத்தி மெதுவாக ரசித்து உண்ணும்பொழுது உடல் ஆரோக்கியம் கிட்டும் .   இயற்கையின் இனிமை கண்டு ரசிப்பதும்  அதனை ஆராய்ச்சி செய்வதும் நம்மை இறைவனது ஆற்றல் அறிய வழி வகுக்கின்றது. நாம் உண்ணும் உணவினை அனுபவித்து ரசித்து உண்பதில் நமது உடலுக்கு ஆரோகியதினை தருவது மட்டுமில்லாமல்  நிச்சயமாக இறைவனது 'அல்லாஹ்வின்' (சிலர் இயற்கை என்று சொல்வார்கள்)  ஆற்றல் அதில் அடங்கி இருப்பதனை  அறிய வருகின்றோம். உண்ணும் உணவு எங்கிருந்து வந்தது என்பதனை என்றாவது சிந்தனை செய்து பார்த்தீர்களா! சோறு அரிசியிலிருந்து  வந்தது .அரிசி நெல்லிருந்து  வந்தது  ... தொடருங்கள் ..உங்கள் சிந்தனையை . இறுதியில் உங்கள் முடிவு இறைவனது மாட்சிமை உங்கள் மனதில் அறிய வரும்.
சராசரி உடல் ஆரோக்கியத்திற்கு மனநல வளர்ச்சிக்கும் நல்ல சீரான உணவு அவசியமாகின்றது அது தேவையான உணவு  எடுத்துக்கொள்ளும்போதுதான் வயதும் வாழ்கையும்  முறைப்படும் .சிலர் வாழ்வதற்காக உணவு சாப்பிடுவார் .சிலர் சாப்பிடுவதற்காகவே வாழ்வர் . நாம் நல்வாழ்வு பெற ஆரோக்கியமான  முறையான உணவு சாப்பிடுவதனை முறைப் படுத்திக் கொள்வோம்  .
பெரும்பாலானவர்களுக்கு அலுவலக வேலைகளால் வீடுகளில் அல்லது ஹோட்டல்களில் கூட   காலை டிபன் சாப்பிடுவதற்கு நேரமே இருக்காது. காலையில் எழும்போதே டென்சன், குளித்து முடித்து அலுவலகம் கிளம்புகையில் என்கேயாவது   ஒரு  காப்பி  அல்லது சேண்ட்விச் அல்லது பிஸ்கட்டுடன்  காப்பி அருந்தி விட்டு ஓடும் நிலை .பல‌ரிட‌ம் இரு‌க்கு‌ம் கெட்ட பழ‌க்க‌ங்க‌ளி‌ல் காலை உண‌வை‌த் த‌‌வி‌ர்‌ப்பது‌ம் ஒ‌ன்றாகு‌ம். இதனை வெளிநாட்டிலும் பார்க்கலாம் . விடுமுறை நாட்களில் மட்டும் விரும்பிய காலை டிபன் (உணவை ) சாப்பிட வாய்ப்பு கிடைக்கும் .



 இரவில் தூக்கதில்  நோன்பு இருந்து காலையில்உண்ணாவிரதத்தினை முடிவுக்கு கொண்டு வந்து  இழந்த சக்தியை மீட்கத்தான் காலை உணவிற்கு ஆங்கிலேயர்கள் பிரேக் பாஸ்ட் (Break fast)என பெயர் வைத்தார்களோ!
காலை உணவுதான் மிகவும் சத்துள்ளதாக இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததுதான். வேலை செய்வதற்கு  தேவையான சத்துள்ள கலோரி நமக்கு அவசிசயமாகின்றது. காலை உணவை உட்கொண்டால்தான், நாள் முழுவதும் உரிய சக்தியுடன், களை‌ப்‌பி‌ன்‌றி செய‌ல்பட முடியு‌ம். வேடிக்கையாக சொல்வார்கள் காலையில் ராஜா மாதிரி சாப்பிட வேண்டும். மதியம் நடுத்தர உணவையும், இரவு பிச்சைக்காரன் (அந்த கால பிச்சைக்காரன்) மாதிரியும் சாப்பிட வேண்டும் என்பார்கள். இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் க்ளுகோஸ்சின் அளவு குறைந்துவிடும். இதனை உடனடியாகத் திரும்பப் பெற காலை உணவு அவசியம். எப்பொழுதும் பாதி வயிறு சாப்பிடுவதும்,கால் வயிறு தண்ணீரும் கால்  வயிறு வெற்றிடமாகவும் இருப்பது ஆரோகியதினைத் தரும்  பால் மற்றும் பருப்பு வகைகளை நாம் உணவாக எடுத்துக்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான கால்சியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் கிடைக்கின்றன. அதனால், அவற்றை காலை டிபனாக எடுத்துக் கொள்வது நல்லது.
நம் நாட்டு  உணவு நாம் அறிவோம் .அதிலும் இடத்திற்கு இடம் மாறுபடும். கேரளாவில் புட்டு. வடநாட்டில் சப்பாத்தி தமிழ்நாட்டில் இட்லி ,தோசை இப்படி பலவகை.....

1 comment:

  1. ஒவ்வொரு வேளையும் எப்படி உண்ண வேண்டும் என்பதை சரியாக சொன்னீர்கள்...

    காலையில் நன்றாக சாப்பிடும் குழந்தைகள் பலவிதத்திலும் திறமையாக இருக்கிறார்கள் என்பது சான்று...

    நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete