Monday 22 July 2013

நாம் யார் என்பதை அறிவோம்!



வந்ததே வந்தாய் பார்த்து படித்து எழுது
எழுதுவது உன்னையும் உயர்த்தட்டும்
எழுதியது என்னையும் உயர்த்தட்டும்
எழுதிதை மற்றவர்களும் பார்க்கட்டும்

நீ யார் என்பதை அறிய உன் கருத்தைச் சொல்
நீ யார் என்பதை அறிய உன் கருத்தே காட்டிவிடும்
நீ எழுதியது உன் உள்மனதை காட்டிவிடும்
நீ எழுதியது உன்னை உருவாக்கும்
நீ எழுதியது என்னையும் உருவாக்க வழி வகுக்கட்டும்

உன் நோக்கம் உன் பக்கம் உன்னை யாரும் பார்க்க உருவாக்கும்
உன் நோக்கமும் என் நோக்கமும் நம்மை நாமே உயர்த்திக் கொள்ள
உன் வழியும் என் வழியும் வெவ்வாராக இருக்கலாம்
உன் வழிக்கும் என் வழிக்கும் நாமே பாதகமாக இருக்கக் கூடாது
உன் வழியும் என் வழியும் மக்களுக்கு சேவை செய்யும் வழியாக அமைய வேண்டும்

நாம் விரும்பி நாம் பிறக்கவில்லை
நாம் வந்தது நம் தாய் தந்தையின் காதலின் விளைவு
நாம் வந்த வழி நாம்  அறிவோம்
நாம் போகும் வழியும்  நாம் அறிவோம்
நாம் போகும் இடத்திற்கு நாம் நன்மையை எடுத்துச் செல்வோம்


ஒவ்வொருவனும் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு பொருளும்
ஒவ்வொரு காரணத்திற்காக  ஒவ்வொரு லட்சியத்திர்க்காகவே படைக்கப்பட்டன
ஒவ்வொரு ஜீவனைப் படைத்தவனை அறிந்து அவனுக்கு நன்றி செய்தல் வேண்டுவது கடமை
ஒவ்வொருவனும்  ஒரு உயர்வில்லாமல் படைக்கப்படவில்லை

நம் உயர்வை நாமே அறிய நமக்குள் ஒரு உயர்வு மனப்பான்மை வேண்டும்
நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளாமல் இருக்கும் மனப்பான்மை வேண்டும்
நம்மை நாமே ஆய்வு செய்துக் கொள்வது அவசியமாக வேண்டும்

2 comments:

  1. முடிவில் மூன்று வரிகளும் முத்தான வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Self-effacing or self-appraisal is a tool we can use to weigh the way we live.
    Nice, inspiring write.

    ReplyDelete