Saturday 6 July 2013

தாய் வயிற்றிலேயே வைத்திருக்க முடியாது .உருவான குழந்தையை!

தாய் வயிற்றிலேயே  வைத்திருக்க முடியாது .உருவான குழந்தையை
காதலையும் இதயத்திலேயே வைத்திருக்க முடியாது கனிவான  காதலை

தாய்க்கு இடுப்பு வலி வரும்
காதலிக்கு இதய வலி வரும்

உருவான குழந்தை பிறந்துதான் ஆக வேண்டும்
கனிவான காதல் கல்யாணத்தில்  முடிந்தாக வேண்டும்

ஜாதியை ஒழிக்க கலப்பு திருமணமென்பது
வேடிக்கையான கண்டுபிடிப்பு

காரணம் வைத்து வருவதல்ல காதல்
காதல்  கொண்டவர் நேசத்தை வைத்து காதல் வசப்பட்டார்
காதல் காரண காரியத்தை வைத்து வருவதில்லை

கலப்பு திருமணத்தால் ஜாதியை ஒழித்து விடலாமென்பது கற்பனையே
பிழைப்பிற்காக ஜாதியை உண்டாக்கியவன் மனிதன்
பிழைக்க வழியைக் காட்டு சமத்துவம் பிறக்கும்
அரசு வேலையில் ஒதுக்கீடு கொடுத்தாய் சமத்துவம் வர
அரசு வேலையில் ஒதுக்கீடு கொடுத்ததால்
தனக்கு கிடைக்க வேடியது கிடைக்காமல் ஒதுக்கப்பட்டோம்
தனியார் துறையில் வாய்ப்பை உருவாக்கி மேலோங்கி நிற்க
தனியார் துறையை உருவாக்கி தானே உயர்ந்து வருகிறான்
தனியார் துறையிலும் வாய்ப்பை பரவலாக்கி விடு
வசதியும் கல்வியும் வர வித்தியாசம் குறையும்
கல்வியை உயர்வாக்கி கொடுத்துவிடு
உயர்வான கல்வி அனைவரும் அடைய ஜாதி தானே அழியும்

1 comment:

  1. ஆழ்ந்த உணர்ந்த கல்வி எல்லாவற்றையும் மற்றும் சக்தி உண்டு என்பதை அருமையாகச் சொன்னீர்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete