Sunday 28 July 2013

ஃபேஸ்புக்கில், ட்விட்டரில், கூகுல்+ அல்லது சமூக வலைதளங்களில்

ஃபேஸ்புக்கில், ட்விட்டரில்,  கூகுல்+ அல்லது சமூக வலைதளங்களில்
அதிகமாக நண்பர்கள் சேர்ப்பது தவறு இல்லை .
சில செய்தித்தாள்கள் தவறாக செய்தி கொடுப்பதுபோல் நாமும் தவறாக செய்திகளை கொடுப்பதுதான் தவறு.

பலதரப்பட்ட மக்களை பார்க்கிறோம்
பலதரப்பட்ட மக்களோடு தொடர்பு உண்டாகின்றது
உலகமே நம் கையில் இருப்பது போல் இருக்கின்றது
மனிதநேயம் உண்டாக்க ஒரு வாய்ப்பு உண்டாகின்றது

பல பத்திரிக்கை படிப்பதை நம்மால் முடிவதில்லை ஆனால் படித்தவர்கள் இங்கு சொல்ல நாம் பார்க்கிறோம் .அது உண்மையா! என்பதை அறிய கணினி வழி தேடுதலை தொடர்கின்றோம்.

சிலர் அருமையான கட்டுரைகளும் ,கவிதைகளும் தருகிறார்கள் .அதைப் பார்த்து நம் அறிவை வளர்த்து நாமும் அவர்களைப் போல் எழுத முயல்கிறோம். இது முயற்சியை ஊக்குவிக்கின்றது .

நாம் எழுதுவது மற்றவர்கள் மனதை நோகச் செய்யும் என்ற நோக்கம் நமக்கில்லை
நாம் எழுதுவது நமக்காக இருக்கும் போது நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளும் மனம் வருமா!
நமக்கு இறைவன் கொடுத்த அறிவை நம்மோடு புதைந்து விட்டால் உயர்வேது!
'உனக்கு கொடுத்த அறிவை அடுத்தவருக்கு ஏற்றி வைப்பவரே உங்களில் உயர்ந்தோர் ' என்பது நபியின் மொழி

இறைவன் நம்மை விளையாட்டிற்கு படைக்கவில்லை . நாமும் ஒரு காரணத்திற்காகத் தான் படைக்கப் பட்டுள்ளோம்.

நம்மைப் பற்றி நாமே சிந்திப்பதற்கும் இது வழி வகுக்க முடியலாம் !

6 comments:

  1. சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)

    (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

    ReplyDelete
  2. செய்வீர்களா...? நன்றிகள் பல...

    ReplyDelete
  3. @ திண்டுக்கல் தனபாலன்
    நன்றிகள் பல.

    ReplyDelete