Thursday 4 July 2013

இயல்பாய் வந்த காதல் எந்த காற்றிலும் உடையாத சவுக்கை மரமாய் ஆடி நிற்கும்

காதலில் தோற்றால்  தற்கொலை மடமை
காதலில் தோற்றாலும்  சேவை செய்து வாழ்வது உயர்வு
உயிரை உன்னால் உண்டாக்க முடியாது அதனால்
உயிரை அழிக்க உனக்கு உரிமை இல்லை
தற்கொலை செய்தால் காதல் வாழ்ந்து விடாது
தற்கொலை செய்வதற்கு வழிகாட்டியாக யாரும் இருந்து விடக் கூடாது
தற்கொலை செய்பவனுக்கு சுவனம் கிடைக்காது
தற்கொலைக்கு தற்கொலை செய்
தற்கொலையை  ஆதரிப்போர் தவறு செய்ய தூண்டுவோர்



வாழுங்கள் வாழவிடுங்கள் .
விரும்பியவள் நகர நீயும் நகர்ந்து விடு
திருமணமே இரு மனம் விரும்பி ஒப்புக் கொண்ட ஒப்பந்தம்
உறவு முறியாமல் இருக்க இறுதிவரை அன்பால் அரவணைத்துப் போ
அன்பும் ,அமைதியும் தொடர வில்லையெனில் கதவை திறந்து விடு
வந்தவர் வந்தவழியே சென்று விடட்டும்
அன்பு இல்லாத இருமன இணைப்பு அடித்தளம் இல்லாத கட்டிடம்
உறுதியான கட்டிடத்தை உடைக்க யாராவது எத்தனித்தால் இயன்றவரை போராடி வெற்றி கொள்
காதலிப்பது வாழ்வதற்கே . காதலிப்பது இயல்பாய் வந்தது
இயல்பாய் வந்த காதல் எந்த காற்றிலும் உடையாத சவுக்கை மரமாய் ஆடி நிற்கும்

2 comments:

  1. அருமையாகச் சொன்னீர்கள்...

    /// தற்கொலைக்கு தற்கொலை செய்... ///

    ReplyDelete
  2. Love is not be all and end all of life.

    ReplyDelete