Saturday 29 June 2013

காலமெல்லாம் கவலை !


பணமில்லையே என்ற கவலை வந்தது

பணம் கிடைத்தும் அதை அனுபவிக்க உடல் நலமில்லையே என்ற கவலை வந்தது

திருமணம் ஆக வில்லையே என்ற கவலை வந்தது

திருமணம் ஆன பின் நாம் நினைத்தபடி மனைவி அமையவில்லையே என்ற கவலை வந்தது

திருமணம் ஆகிய பின் குழந்தை பெரும் பாகியமில்லையே என்ற கவலை வந்தது

குழந்தைகள் பெற்றும் நாம் நினைத்தபடி குழந்தைகள் படிக்கவில்லையே என்ற கவலை வந்தது

வளர்த்த செடி சிறப்பாய் வளர பாதுகாப்போடு கவணிப்போம்
மனம் மணமாய் மகிழ்ந்து மனம் வீச இறையருள் இதயத்தில் இருக்க நினைப்பதில்லை
துன்பம் வர துவளுகிறோம் .மகிழ்வு வர துள்ளுகிறோம்
இன்பத்தையும் துன்பத்தையும் சமநிலை கொண்டு மனதை சமப்படுத்திக் கொள்வதில்லை

சிறிய கவலை பெரிய கவலை வந்து மறையும் இது நியதி
மறதி என்று ஒன்றில்லையெனில் மனோவியாதி வந்து மடிவோம்

அத்தனைக்கும் மருந்து இறைவனைத் தொழுது தொடர் வேலையில் தொடர்வதே சிறப்பாக்கி வைக்கும்.

ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.-- குர்ஆன்  94:5
------------------------------------------------------------------------------------------------------
(இதற்கு பின்னும்) அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால் (நபியே!) நீர் கூறுவீராக: “நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டிருக்கின்றேன்; என்னைப் பின்பற்றியோரும் (அவ்வாறே வழிப்பட்டிருக்கின்றனர்.)” தவிர, வேதம் கொடுக்கப்பட்டோரிடமும், பாமர மக்களிடமும்: “நீங்களும் (அவ்வாறே) வழிப்பட்டீர்களா?” என்று கேளும்; அவர்களும் (அவ்வாறே) முற்றிலும் வழிப்பட்டால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள்; ஆனால் அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் (நீர் கவலைப்பட வேண்டாம்,) அறிவிப்பதுதான் உம் மீது கடமையாகும்; மேலும், அல்லாஹ் தன் அடியார்களை உற்றுக்கவனிப்பவனாகவே இருக்கின்றான்.
-- குர்ஆன் -3:20.

. எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.-- குர்ஆன் -3:139.
http://www.tamililquran.com/

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
94:1    أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ
94:1. நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
94:2   وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ
94:2. மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.
94:3   الَّذِي أَنقَضَ ظَهْرَكَ
94:3. அது உம் முதுகை முறித்துக் கொண்டிருந்தது.
94:4   وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
94:4. மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
94:5   فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
94:5. ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
94:6   إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
94:6. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
94:7   فَإِذَا فَرَغْتَ فَانصَبْ
94:7. எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.
94:8   وَإِلَىٰ رَبِّكَ فَارْغَب
94:8. மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.
http://www.tamililquran.com/qurandisp.php?start=94

4 comments:

  1. வாழ்க்கை இருகோடு தத்துவங்கள் தான்...

    மறதி இல்லையெனில் மனித இனம் ஏது...?

    சிந்திக்க வேண்டிய பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. nice, inspiring read. One needs to get oneself steeled to face the odds of life.

    ReplyDelete
  3. @ திண்டுக்கல் தனபாலன்
    நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete