பெண்கள் சட்டத்தினை உருவாக்குவார்கள் ஆனால்...!
அச்சம் ,மடம், நாணம் ,பயிர்ப்பு இவை பெண்களுக்கு மட்டும் தேவையா!
தவறு செய்வதற்கு அச்சம் இருப்பதுதானே முறை. நாணப் படுவதற்கு நாணப்படுவதுதானே உயர்வு "அஞ்சுவது அஞ்சாமை பேதமை" .இது ஆணுக்கும் பெண்ணுக்கும் அவசியம் தேவை . வீரம் நிறைந்தவனாக ஆண் மட்டும் இருந்தால் போதுமா! தனக்கு வரும் ஆபத்தினை எதிர்கொள்ள ஒரு பெண்ணுக்கும் அவசியம் தேவை . குணங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சில வேறுபாடுகள் இருந்தாலும் இக்காலத்தில் பலவகையான குணங்களை ஆணும் பெண்ணும் அவசியம் பெற்றுக்கொள்ள தேவைப் படுகின்றது. அனைத்துக்கும் மேலாக நல்ல காரியங்களுக்காக ஆணும் பெண்ணும் அனுசரித்து போகும் நிலை அவசியம் தேவைப் படுகின்றது . ஆணின் காலில் விழும் பெண்ணின் குணமும் பெண்ணின் காலில் விழும் ஆணின் குணமும் அவசியம் அழிக்கப் படவேண்டும். சுமரியாதையை வளர்த்து இறைவன் ஒருவனுக்கே அடிபணிவேன் என்ற மனப்பக்குவம் வந்தே ஆக வேண்டும். உனது உரிமை எனது உரிமையை பாதிக்கக் கூடாது என்பது பொதுவான சிந்தாந்தம். வாழ்வோம் வாழ விடுவோம் இதுதான் நம் கொள்கையாக மாற வேண்டும்
பெண்கள் சட்டத்தினை உருவாக்குவார்கள் ஆனால் அந்த சட்டங்கள் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் மாற்றப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். பெண்கள் ஒருபோதும் தவறுகள் செய்ய மாட்டார்கள் அப்படியே அவர்கள் தவறு செய்ய நேர்ந்தால் அது ஆண்களால் தூண்டப் பட்டவைகளாகவே இருக்க முடியும். பெண்கள் மனது சபலம் வாய்ந்தது மாற்றம் நாடுவது. ஆண்கள் மனது நிலை கொண்டது விரும்பியதை அடைய எந்த வழியும் கையாளும் குணம் கொண்டது
பெண்கள் புகழப்படுவதை விரும்புவாகள் புகழ்ச்சிக்கு அடிபணிவார்கள். ஆண்கள் புகழப்படுவதை விரும்பினாலும் அதில் ஒரு சந்தேகக் கண் இருக்கும்.
பெண்களுக்கு மூட நம்பிக்கையின் மீது நம்பிக்கை வந்தால் அதில் முழுமை இருக்கும் அதனால்தான் சாமியார்கள் கை ஓங்கி நிற்கின்றது , ஆண்களின் மூட நம்பிக்கை சந்தேகக் கண் கொண்டது.
பெண்கள் மனம் அலை பாயாது ஒரு காரியத்தில் இறங்கினால் அதில் தங்கள் கவனம் சிறப்பாக இருக்கும் அதன் காரணமாகவே பெண்கள் படிப்பில் அதிக மதிப்பெண்கள் வாங்க முடிகின்றது /ஆண்களுக்கு அறிவு இருந்தாலும் எண்ணங்கள் சிதறிவிடுவதால் படிப்பில் பெண்களுக்கு அடுத்த நிலைதான் வர முடியும் .
பெண்கள் வீட்டில் தலைமைப் பொறுப்பில் இருந்தாலும் வெளியில் அடக்கியே தன்னை காட்டிக் கொள்வார்கள்
ஆண்கள் வெளியே தலைமைப் பதவிக்கு ஆசைப்பட்டாலும் வீட்டில் சித்தாளாகவே இருந்து நினைத்ததை முடிக்க விரும்புவார்கள்
பெண்கள் புரிந்துக் கொள்ளும் ஆற்றலுடையவர்கள், வைத்திருக்கும் ஆடையை எப்போது எவ்வாறு அணிவது என்பதில் மிகவும் கவனம் செலுத்துவார்கள். ஆண்களுக்கு அதில் அசட்டையான குணமே மேல் நோக்கி நிற்கும்.
பெண்களுக்குள் தொலைபேசியில் பேசிக் கொண்டால் அதனை துண்டிப்பதற்கே மனம் வராது .இரண்டு மணி நேரமும் பேசுவார்கள். 'என்ன பேசினாய் என்று கேட்டால்' 'மறந்து விட்டது அல்லது ஒன்றும் பேசவில்லை அவள் என்னன்னமோ கேட்டால் அதற்க்கு பதில் சொன்னேன் நாங்கள் பெண்களுக்குள் எதையாவது பேசுவோம் அதை நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்' என்ற பதில் கடுமையாக வரும்.
பெண்களுக்கு பதினேழு வயதிலேயே ஒரு பக்குவம் வந்துவிடும் ஆனால் ஆண் அப்பொழுதும் விளையாட்டுப்பிள்ளைதான்
மாதவிடாய் நிற்கும் காலத்தில் வைட்டமின்(சத்து ) மாத்திரைகள் சாப்பிடுவது நல்லது இல்லையென்றால் மூட்டு வலிகள் வர வாய்புகள் அதிகம். உடலின் எடைகள் அதிகரிக்கும் உடம்பில் சூடு அதிகரிக்கும். ஆண்களுக்கு அந்த வயதில் பெண்கள் மீது நாட்டமும் இளம் வயதினருக்கு உள்ள ஆசைகள் வரும்.மோட்டார் சைக்கில் ஒட்டவும் ஆசைப்படுவார்கள்.
ஆண்களுக்கு குளியல் அறைக்கு தேவைப்படுவது ,ஒரு பல் விளக்கும் ப்ரஸ் , அதற்க்கான பேஸ்ட், சவரம் செய்ய ரேசர், அதற்கு தேவையான கிரீம் ஒரு சோப்பும் மற்றும் டவலும் போதும் .பெண்களுக்கு என்னற்ற உபகரணங்கள் தேவை ஆனால் அதில்பாதி பயன்படுத்தப் படாமலேயே இருக்கும் . காரணம் பார்பதெல்லாம் வாங்குவதிலும் மற்றவர்கள் வைத்திருப்பதை தானும் வாங்கி வைத்திருக்க வேண்டும் என்ற தாளாத ஆசைதான்.
பெண்கள் பொருட்கள் வாங்க கடைக்கு போகும் முன்பே தேவையான பொருட்களை குறித்துக் கொள்வார்கள். கடைக்கு போன பின்பு புதுமையான பொருட்கள் இருந்தால் அதனை வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவார்கள். ஆண்கள் வாயைப் பொத்திக் கொண்டு மறுப்பு சொல்லாமல் பணத்தினை கொடுத்து வர வேண்டியதுதான், இல்லையென்றால் வீட்டில் ஒரே அமைதிதான்,கலகலப்பே போய் விடும்
பெண் கணவன் கிடைக்கு முன் தன் எதிற்காலத்தினைப் பற்றி மிகவும் சிந்திப்பாள் கணவன் வரும்வரை. திருமணத்திற்கு முன் ஆண் எதிற்காலத்தினைப் பற்றிய சிந்திப்பதில்லை மனைவி வந்த பின்
எதிற்காலத்தினைப் பற்றியே அதிகம் சிந்திப்பான் .
விவாதத்தின் முடிவு பெண்களிடம் ஆண் ஏதாவது முடிவில் சொல்லிவிட்டால் திரும்பவும் அந்த விவாதம் தொடங்கிவிடும்
பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு ஆனால் குறைகளை சுட்டிக் காட்டும் குணம் அதிகம் ஆனால் கதைகள் சொல்வதில் திறமையுடையவர்கள் ஆண்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் அதனால் ஆண்கள் யாரைப் பற்றியும் கிண்டலும் செய்வார்கள்.ஆண்களுக்கு கதை எழுதத் தெரிந்தாலும் சொல்லத் தெரியாது.ஆனால் காப்பியடிப்பதில் கெட்டிக்காரர்கள்.
ஒரு வெற்றியான ஆண் தன் மனைவி செலவு செய்வதைவிட அதிகம் சேர்ப்பவன்,ஒரு வெற்றியான பெண் தன் செலவுக்கு அதிகமாக பணம் சேர்க்கும் கணவனை அடைந்தவள்
பெண்களின் கையழுத்து அழகாக இருக்கும் ஆண்களின் தலையெழுத்து பெண்கள் வசமே இருக்கும்
வெளியே புறப்பட திட்டமிட்டு கிளம்பினால் ஆண்கள் உடனே தயார் நிலை பெண்கள் தயார் நிலைக்கு தயார் செய்வார்கள்
அன்பு கெட்டால் அலது குறைந்தால் பெண் அழுவாள் ஆண் மவுனம் கொள்வான் முடிந்தால் மேலும் சீண்டிப் பார்ப்பான்.
பெண்கள் புகழப்படுவதை விரும்புவாகள் புகழ்ச்சிக்கு அடிபணிவார்கள். ஆண்கள் புகழப்படுவதை விரும்பினாலும் அதில் ஒரு சந்தேகக் கண் இருக்கும்.
பெண்களுக்கு மூட நம்பிக்கையின் மீது நம்பிக்கை வந்தால் அதில் முழுமை இருக்கும் அதனால்தான் சாமியார்கள் கை ஓங்கி நிற்கின்றது , ஆண்களின் மூட நம்பிக்கை சந்தேகக் கண் கொண்டது.
பெண்கள் மனம் அலை பாயாது ஒரு காரியத்தில் இறங்கினால் அதில் தங்கள் கவனம் சிறப்பாக இருக்கும் அதன் காரணமாகவே பெண்கள் படிப்பில் அதிக மதிப்பெண்கள் வாங்க முடிகின்றது /ஆண்களுக்கு அறிவு இருந்தாலும் எண்ணங்கள் சிதறிவிடுவதால் படிப்பில் பெண்களுக்கு அடுத்த நிலைதான் வர முடியும் .
பெண்கள் வீட்டில் தலைமைப் பொறுப்பில் இருந்தாலும் வெளியில் அடக்கியே தன்னை காட்டிக் கொள்வார்கள்
ஆண்கள் வெளியே தலைமைப் பதவிக்கு ஆசைப்பட்டாலும் வீட்டில் சித்தாளாகவே இருந்து நினைத்ததை முடிக்க விரும்புவார்கள்
No comments:
Post a Comment