Tuesday, 27 March 2018

இருப்பும் இறப்பும்

இறந்துவிட்டால் பார்க்க வருவார்கள்
இறந்தவருக்கு வந்திருப்பவர்கள் தெரியாது

பட்டாமணியார் இறந்தால் பத்து பேர் வருவார்கள்
பட்டாமணியார் இருக்க அவர் மனைவி இறந்தால் ஆயிரம் பேர்கள் வருவார்கள்

இறந்துவிட்டால் தவறுகளையோ பாவங்களையோ மன்னித்து விடுவீர்கள்.
இறந்தவருக்கு ஒருபோதும் அது தெரியாது.
இருக்கும்போது மன்னித்து விடுவதில்லை


இறந்துவிட்டால் மௌத் ,பிணம் என்று புதிய பெயரை சூட்டி மதிக்கிறார்கள்
இருக்கும்போது வைத்த ஒரு பெயர் சொல்லி அழைக்க
இன்னும் சில பெயர்கள் செயலுக்கு பொருத்தமாக காரணப் பெயர்கள் சேர்க்கப்பட்டு அழைக்கப் படுகின்றன
இருக்கும்போது அதிக நேரத்தை செலவிட
இறந்துவிட்டால் அடக்கும்வரைக் கூட இருப்பதில்லை
இருக்கும்போது உடன் இருந்தவரும்
இறந்துவிட்டால் உடன் வருவதில்லை

இருக்கும்போது சேர்த்த நன்மைகளும் மற்றும் தீமைகளும் உடன் வருகின்றன
இருக்கும்போது அத்தனையும் அறிந்தும் அறியாமல் அடாவடியாக இருந்ததேன்!
அதுதான் அறிந்தும் அறியாதநிலை அனைவருக்கும்

No comments:

Post a Comment