படி படி என்ற ஓசைகள் ரீங்காரமாக காதை துளைக்கின்றது
படிப்பதெல்லாம் பெருமைக்காகவும் தேர்வில் மனனம் செய்ததை வாந்தி செய்வதற்க்காக உள்ளது
நான் படிக்கும் காலத்தில் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதோடு சரி
படித்தாயா என்று சொல்வதில்லை
விடிகாலையில் எழுப்பி விடுவார்கள் பள்ளிக்கு தொழச் செல்ல
அது மழைக்காலமாக அல்லது குளிர் காலமாக இருந்தாலும்
அம்மாவுக்கு உள்ள பாசத்தால் குளிர் காலத்திலும் மழைக்காலத்திலும்
விடிகாலையில் எழுப்பாமல் இருந்தாலும் அத்தா விடாது
வளர்ந்த பின் பள்ளிக்கூட படிப்பை முடிக்கும் முன்பே அம்மாவும் அத்தாவும் இறந்துவிட்டதால்
அண்ணன்கள் என்னை இருக்கும் பெரிய தொழிலில் இறக்கிவிட விரும்பினர்
ஆனால் எனக்கு சென்னையில் சென்று படிக்க விரும்பினேன் .அது படிக்கும் ஆர்வத்தில் அல்ல .சென்னை வாழ்க்கையை விரும்பியதால்
லயோலா கல்லூரியில்தான் படித்தேன் .நல்ல நண்பர்கள் .
மனனம் செய்வது என்னால் முடியாது . அக்காலத்தில் மு. வ . மற்றும் கு.ராஜவேலு புத்தகங்கள் விரும்பிப் படிப்பேன்
வகுப்புத் தலைவனாக பேராசிரியர் என்னை தேர்ந்தெடுத்தார் .ஆனால் நான் எனக்கு வேண்டிய நண்பனை அந்த பொறுப்பில் வைத்து நான் வகுப்புக்கு போகவில்லைஎன்றாலும் போனதுபோல் செய்துவிடச் சொல்வேன்
"An apology for idlers" by Robert Lewis Stevenson
http://essays.quotidiana.org/stevenson/apology_for_idlers/
கல்லூரியில் தேர்வுக்காக முக்கியமான பாடங்களை படிக்கச்சொல்லி வற்புறுத்துவார்கள் .நான் ஒரு முறை பாட புத்தகத்தை படித்து விடுவேன் .மனதில் பதிவது குறைவாகத்தான் .ஆனால் படித்த பக்கங்கள் காட்சியில் நிற்கும்
தேர்வில் முக்கியமான பகுதியிலிருந்து கேள்விகள் வரவில்லை . நமக்கு இருப்பதை பெருக்கி கதையாக்க முடியும் .அதைவைத்து தேர்வில் வெற்றி பெற்றேன் .நன்றாக படித்தவர்கள் அதிகமாக மதிப்பெண்கள் பெறவில்லை
இதே நிலைதான் சட்டக கல்லூரி தேர்விலும்
சட்டம் படிக்கச் செல்பவர்கள் முதலில் தானாக் படிக்க முயல்வது குற்றவியலில் பாலியல் பாடத்தைSection 375 Indian Penal Code
https://www.google.com/intl/ta/inputtools/try/
Murder: Section 299 & 300 of the Indian Penal Code
https://lawnn.com/murder-section-300-indian-penal-code/
ஆனால் அதனை தேர்வில் கேள்வியாக வாராததால் தேர்வுக்காக யாரும் படிப்பதில்ல
ஆனால் வகுப்புக்கு வராதவர்கள் அந்த வகுப்புக்கு வருவார்கள் .பேராசிரியர் முதல் நாளே அறிவுப்பு கொடுத்துவிடுவார் .அதனால் பெண்கள் வரமாட்டார்கள் .
எங்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர் அருமையாக நகைச்சுவையாக பாடம் நடத்துவார் .அது மனதில் பதிந்து விடும் ..அந்த வருடம் பாலியல் சம்ம்பந்தமான கேளிவிகள் தேர்வில் வந்தன
அந்த பதிவு தேர்வில் உதவியது
மனன்ம செய்தவர் நிலை உறுதி இல்லாத நிலை
பொது அறிவு பெற்றவனுக்கு உறுதி உண்டு
No comments:
Post a Comment