Saturday, 31 March 2018
இது ஒரு 'ஸ்பெசல் மாம்பழம் ' சுவையோ! சுவை! இமாம் பசந்த் மாம்பழம்
இது ஒரு 'ஸ்பெசல் மாம்பழம் ' சுவையோ! சுவை!
இமாம் பசந்த் மாம்பழம்
மாம்பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்
மாம்பழத்தில் பல வகை உண்டு
மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது.
மாம்பழத்தில் இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது.
இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் அதனை அளவோடு சாப்பிட வேண்டும்
அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு வந்து விடும்
மாம்பழத்தில் இனிப்பும் அதிகமாக இருப்பதால்
மாம்பழத்தை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வார்கள்
மயிலாடுதுறை பாதிரியார் ஒரு புது வகை மாம்பழத்தை உருவாக்கினார்
அதனால் அந்த மாம்பழத்திற்கு' பாதிரி மாம்பழம்' என்ற பெயர் வந்து விட்டது
இது மயிலாடுதுறை பக்கத்தில் மட்டும் உற்பத்தி செய்யப் படுகின்றது
' பாதிரி மாம்பழம்' மிகவும் சுவையானது .
எனது நண்பர் வாலாஜாபாத் தோட்டத்தில் ஒரு புது மாம்பழம் இருந்தது .
அதிலிருந்து பல மாம்பழங்களை எனது நெருங்கிய நண்பர் திரு .தாஸ் எனக்கு தந்தார்
அதனை எங்கள் ஊர் நீடூருக்கு கொண்டு வந்து சாப்பிட்ட பின் அதன் கொட்டைகளை
எரு குழியில் போட்டு விட்டோம்
தூக்கி எறிந்தது முளை விட்டு செடியாகி பெரிய மரமாக வளர்ந்து நிறைய பழங்களைத் தருகின்றது
இது ஒரு 'ஸ்பெசல் மாம்பழம் '
இதன் சுவையோ தனி சுவை .
புளிப்பு இருக்காது .
இதனை பலருக்கு கொடுத்தேன் .அதனை சாப்பிட்டவர்கள் அனைவரும் மகிழ்ந்து தங்களுக்கு ஒவ்வொரு வருடமும் கொடுக்க வேண்டுமென விரும்புகின்றார்கள் .இம்மாதிரி 'ஸ்பெசல் மாம்பழம் ' இப் பக்கமே கிடையாது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment