Thursday 29 March 2018

நல்லவை நாடி அல்லவை ஒதுக்கு

அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
தவறான தனி மனிதரின் ஆய்வு தகாதது
இறைவாக்கினர் அல்லது தீர்க்கதரிசி (prophet) எனும் நபர் மீதும் .பிறப்பின் மீதும் ,குடும்பத்தின் மீதும்
தரக் குறைவான விமர்சனங்களையும் அவதூறுகளையும் பரப்பப்பட்டதை சரித்திரம் கண்டிருக்கின்றது
அதனால் இறைவாக்கினர் அல்லது தீர்க்கதரிசிகளின் வாக்கோ அல்லது அவர்களது மதிப்போ கெட்டுவிடுவதில்லை
நம்முடன் இருப்போர் ஒருவருக்கொருவர் சண்டைப் பொண்டுக்கொண்டிருக்க அடுத்தவர் பற்றியே நாம் பேசி கொண்டிருக்கின்றோம்

நம்மோடு ஒருவர் சேர்ந்தால் அதனை பெருமையாகப் பேசுகின்றோம் ஆனால் நம்மைவிட்டு பிரிந்து
செல்பவர்களைப்பற்றி நாம் பாராமுகமாக இருக்கின்றோம்
தன்னைப்பற்றி உயர்வாக சொல்ல ஒன்றும் இல்லாத நிலையில் நமது மூதாதையர்களின் பெருமையைப்பற்றி பேசி காலத்தை ஒட்டுகின்றோம்
தீர்க்கதரிசிகளைத் தவிர தவறு செய்யாத மனிதன் ஒருவரும் இல்லை
தனிப்பட்ட தவறு அவனுக்கும் இறைவனுக்கும் உள்ளது .மக்களுக்கு இழைத்த தவறு அவனுக்கும் மக்களுக்கும் இடையே உள்ளது .அதனை மக்கள்தான் மன்னிக்க வேண்டும் பின்புதான் இறைவன் மன்னிப்பான்
குற்றம் செய்தவர்களைவிட குற்றம் செய்யத் தூண்டுபவரே முக்கிய குற்றம் செய்தவராவார்
அவதூறு பரப்பி குற்றம் செய்தவராக ஆகிவிட வேண்டாம் .
ஆக்கப் பூர்வமான நற்காரியங்களில் சேவையை செய்து நன்மையைப் பெறுவோம்

உளவியல் ஏனைய சமூக அறிவியல் ஆய்வு முறைகளுடன் தனது ஆய்வு முறைகளைப் பயன்படுத்துகின்றது. சமூக உளவியல் ஆய்வுகளில் பயன்படுத்தும் ஆய்வு முறைகளாக,. அகநோக்கு முறை; உற்றுநோக்கல் முறை; நேர்காணல் முறை; பரிசோதனை முறை; தனியாள் வரலாற்று ஆய்வு ...
குர்ஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமான கருத்துக்களை தனி நபர்களோ, இயக்கங்களோ முன் வைத்தால் .எந்தக் கருத்து சரியானது என்று நமக்குத் தோன்றுகிறதோ அதைத் தான் மக்களிடம் நாம் வைக்க வேண்டும். தவறானது என்று நமக்குத் தோன்றுவதையும், சரியா தவறா என்று நமக்கே சந்தேகமானதையும் நாம் மக்களிடம் வைக்கக் கூடாது.
தனி நபர்களைப் பற்றி எழுதப்படும் தரக் குறைவான விமர்சனங்களை ஒதுக்கி வைக்கவும்
பொறுப்பற்ற கேவலமான இந்த இழி செயலை நாம் செயது பாவங்களைப் பெற வேண்டாம்
அதிலிருந்து விலகி இருக்க விரும்புங்கள்  அந்த நட்புகள் .வேண்டாம். விலகிவிடுங்கள் அல்லது விலக்கிவிடுங்கள்
வாழும் நாட்கள் சிறிது வளர்களை பெரிது
இருக்கும் வரை உயர்ந்த சிந்தனையோடு சேவை மனதுடன் வாழ்வோம்
அவதூறு கூறுவதை இஸ்லாம் தடை செய்திருப்பதோடல்லாமல் அவதூறு கூறுபவர்களுக்கு கடுமையான தண்டனை இருக்கின்றது என்றும் எச்சரிக்கின்றது.

புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

“ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் மீது அவருடைய இரத்தம், கண்ணியம், பொருள் இவற்றை களங்கப்படுத்துவது ஹராமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

“புறம் பேசுபவன் சுவனம் நுழைய மாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (நூல்-முஸ்லிம்)

“எவரின் நாவாலும், கைகளாலும் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் இருக்கின்றாரோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார். அறிவிப்பவர்: அப்துல்லா பின் அம்ர் (ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத்.

வாழ்வில் பல சந்தர்ப்பங்கள் நம்முடைய மனதில் அடுத்தவர்களைப் பற்றிய தீய எண்ணங்களை சுமந்து கொள்ளும் அந்த தீய எண்ணங்கள் குரோதமாக மாறி, தான் கொண்ட தவரான எண்ணத்தை அவதூராக பரப்பும் நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தி விடும்.

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா?அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை

No comments:

Post a Comment