Tuesday, 27 March 2018

மரணத்தைவிட மரண பயம் மிகவும் கொடியது

ஹாங்காங் ஏர்போர்ட் ரொம்ப அழகு.. இரு பக்கமும் மலையும், கடலும் சூழ்ந்த அழகான லேண்ட்ஸ்கேப்.. ரொம்ப சுத்தம்...
(ஹாங்காங்
21.10. 1970.
நேரம் பகல் 12.30
அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு தம்பி முகம்மது அலி எழுதுவது.
அஸ்ஸலாமு அலைக்கும் . இறைவன் அருளால் நலமே சைகோனிலிருந்து சனி மாலை ஐந்து மணிக்கு கேத்தே பசிபிக் விமானத்தில் பறப்பட்டு ஒன்பது மணிக்கு ஹாங்காங் வந்து சேர்ந்தேன். விமானப் பயணம் மிகவும் மகிழச்சியைத் தரக் கூ டியது என்பது உண்மையாயினும் அது பயங்கரமானது என்பதனையும் இப் பிரயாணத்தில் அனுபவத்தில் அறிந்துக் கொண்டேன்

பிரயாணத்தில் மற்றொரு அனுபவம் வானத்தில் விமானம் பறக்கும் போது விமானம் குலுங்கியது .விமானத்தில் பல உணவு பொருள்கள் சிதறி கொட்டின . எனது உடல் சில நொடி மேல் நோக்கி இறங்கியது . காற்றில்லா வெற்றிடத்தில் விமானம் பறக்க முடியாதாம் .மரணத்தைவிட மரண பயம் மிகவும் கொடியது .அனுபவித்தேன்
நான் சைகொனிலிருந்து ஹாங்காங் வந்த போது விமானம் இறங்கும்போதும் அதனை அனுபவித்தேன் .

No comments:

Post a Comment