Thursday, 8 March 2018

கதிர் வீசிடும் காலை உன் ஆணை அல்லாஹ்

கதிர் வீசிடும் காலை...

கதிர் வீசிடும் காலை
உன் ஆணை அல்லாஹ்
இருள் மேவிடும் மாலையும்
உன்னாலே அல்லாஹ்

நல்வாழ்வினில் பேரருள்
நீயே அல்லாஹ்
நிறைவான அன்பாளனும்
நீயே அல்லாஹ்

திருவேதம் நபிநாதர்
தந்தாய் அல்லாஹ்
புவியாவுக்கும் தீனுக்கும்
நீயே அல்லாஹ்

அல்லாஹ் அல்லாஹ்
அல்லாஹ் அல்லாஹ்
அல்லாஹூ அல்லாஹூ
அல்லாஹூ அல்லாஹ்


(அல்லாஹ் (அரபி) = இறைவன் (தமிழ்))

பாடல் கவிதை கவிஞர் அன்புடன் புகாரி
பாடல் பாடியவர் தீனிசைத் தென்றல்,
தேரிழந்தூர் தாஜுதீன்
தயாரிப்பு Mohamed Ali இல்லத்தில்
(முழு பாடல்கள் ஆல்பமாக மற்ற அன்புடன் புகாரி கவிதைகளுடன் விரைவில் இறைவன் நாடினால் வரும் தங்கள் வாழ்த்துகள் மற்றும் துவாவுடன்
அன்புடன் முகம்மது அலி ,அன்புடன் புகாரி
----------------------------------

இறைவா இறைவா

கதிர் வீசிடும் காலை
உன் ஆணை இறைவா
இருள் மேவிடும் மாலையும்
உன்னாலே இறைவா
நல்வாழ்வினில் பேரருள்
நீயே இறைவா
நிறைவான அன்பாளனும்
நீயே இறைவா
திருவேதம் இறைதூதர்
தந்தாய் இறைவா
புவியாவுக்கும் நீதிக்கும்
நீயே இறைவா

 அன்புடன் புகாரி
 -

No comments:

Post a Comment