Thursday, 15 March 2018

உப்பில் கட்டிய பாவை மழைவர கரையும்

உப்பில் கட்டிய பாவை மழைவர கரையும்
இதயம் கட்டிய உறவு உயிருடன் உறையும்

அன்பால் கட்டிய பாசம் நிலைத்து நிற்கும்
பாவையின் பார்வை பாசத்தில் திரும்ப நிலைத்து நிற்பேன்

நான் பேசியதை நானே அறியேன்
நீ பேசியதை நான் அறிவேன்

நான் பேசியதில் நீ குற்றம் கண்டாய்
நீ பேசியதில் நான் சுற்றம் கண்டேன்


நமக்குள் உறவு நீடிக்க விரும்பினேன்
இருக்கும் உறவை உடைக்க விரும்பினாய்

இயந்திரமாய் இயங்கி இருக்கும் இடம் திரும்புகிறேன்
உடைந்த இயந்திரத்தை இயக்க முயல்வதாய் இயம்புகிறாய்

இருமனம் ஒன்றுசேர இயன்றவரை முயல்கிறேன்
ஒருதலைக் காதலாய் முடக்கிட முயல்கிறாய்

நாளாகும் நட்பை வளர்க்க நிமிடம் போதும் நறுக்க
தொடரும் நட்பில் தொய்வு வேண்டாம்

தனிமையின் நிலை சுமையாய் இருக்க
சுமையை தவிர்க்க சுமைதாங்கியாய் இருந்திடு

பனியைத் தூவும் மேகமாய் வந்திடு
பசுமையாய் துளிரும் செடியாய் இருந்திடு

பார்வையின் பிம்பம் கனவிலும் காட்சியாய்
தனிமையின் நினைவு சுமையாய் மாறியதேன்!

தனிமையின் நினைவு மறைந்துப் போக
இறையின் நினைவில் உறைந்துப் போவேன்!

No comments:

Post a Comment