இன்னும் தோற்றுவிடவில்லை வெற்றியை நாடி வழி வகுக்கின்றேன்
இன்னும் சாதிக்கவில்லை சாதிக்க கற்றுக் கொண்டிருக்கின்றேன்
தோல்வி முட்டாளாக்கவில்லை, அது நிறைய நம்பிக்கையை உருவாக்குகின்றது .
தோல்வி அடைந்தால் ஏமாற்றப்பட்டிருப்பதாக அர்த்தமல்ல, முயற்சி செய்ய தயாராக இருப்பதாக திட்டம்
தோல்வியால் வேறு வழியில்லை யெனபதில்லை , வேறு வழியில் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஊக்கம் தருகின்றது .
தோல்வியால் தாழ்ந்துவிடவில்லை , உயர்வதற்கு உந்துதல் சக்தியை தருகின்றது
தோல்வி வாழ்க்கையை வீணாக்கிவிடல்லை, புதிதாக தொடங்குவதற்கு ஒரு காரணம் கிடைத்துவிட்டது
தோல்விதான் முடிவல்ல அது கடினமாக முயற்சி வேண்டும் என்று சொல்கின்றது
தோல்வி அடைந்ததாக மற்றவர்கள் நினைக்கலாம் அதை வெற்றியாக செய்ய சிறிது நேரம் எடுக்கும் என்று மனம் திடமாக சொல்கின்றது
தோல்வி அடைந்ததால் இறைவன் கைவிட்டான் என்று நினைக்கவில்லை, அது எனக்கு இறைவன் ஒரு நன்மையான மற்றொரு காரியம் நடப்பதற்காக நிகழ்ந்ததாக நினைக்கின்றேன்
No comments:
Post a Comment