Wednesday 25 June 2014

முதிர்ந்து உதிர்ந்த இடத்தில் இன்னொன்று உருவாகும்

முயற்சித்தேன்
முயற்சித்தது முடியவில்லை
முயற்சித்தது முடியாததால் முடங்கிப் போனேன்

முடங்கியதைக் கண்ட முதியவர்
முடங்கியதால் மூடனாகிவிடுவாய்
முடங்கியதால் ஒன்றும் அழிவதில்லை
முடங்கியவருக்கும் ஒன்று உயர்வாய் உள்ளது
முதிர்ச்சி பெற்று முயற்சி செய்
முடியும் யென்பதை மனதில் கொள்
முடியக் கூடியது முடிய நேரம் வர முடியும்
முற்சிப்பதே உன் கடமை
முடிக்க வேண்டியது இறைவன் வசமுள்ளது
முடிந்த வரை முயற்சி செய்
மற்றதை இறைவன் நாட்டப் படி நடக்கும்
நம்பிக்கையில் வாழ்வு வளம் பெறுமென்றார்

முதியவர் சொல் நம்பிக்கையை தந்தது
தளராது தொடர் முயற்சியில் ஈடுபட்டேன்
நடப்பது நடக்கட்டுமென்ற நம்பிக்கை ஊக்கத்தை தந்தது
முதிர்ந்து உதிர்ந்த இடத்தில் இன்னொன்று உருவாகும்

No comments:

Post a Comment