Monday 10 February 2014

நம்பிக்கை தனியொரு மனிதனின் உரிமை .

இறைவன் ஒருவருக்கு ஒரு வழி காட்ட
அவர் தனக்கென அவவழியை தொடர்கிறார்
நம்பிக்கை தனியொரு மனிதனின் உரிமை .

ஒரு உயர்வழியை
ஒருவர் பின்பற்ற
மற்றவர் அவரை அல்லது
அவர் பின்பற்றிய வழியை திட்டினால்

திட்டுபவர்கள் திட்டட்டும் .
திட்டுவதனால் திட்டுபவர்களுக்கு தீமை
திட்டப்படுபவர்கள் நேர்மைமையானவர்களாக இருப்பின்
திட்டப்படுபவர்களுக்கு நன்மைகள் சேர
திட்டப்படுபவர்களைப் பற்றி மற்றவர்களும் அறிய
திட்டப்படுபவர்களின் கொள்கை பிடிப்பில்
உயர்வு இருப்பின் மற்றவர்களும் அந்த கொள்கையை நேசித்து இணைவார்கள்

தேவையற்று ஒருவரை அல்லது ஒரு சமூகத்தை
திட்டுவதால் அவர்களுக்குள்(திட்டப்பட்டவர்களுக்குள் )
ஒற்றுமையும் வலிமையும் வருவது உண்டு .
அனைத்தும் நன்மைக்கே

1 comment:

  1. அனைத்தும் நன்மைக்கே என்பது உண்மை தான்...

    ReplyDelete