Wednesday 25 June 2014

மையை கொட்டிய காரிருள்



மையை கொட்டிய காரிருள்
மின்னும் நட்சத்திரங்களின்
மின்மினிப் பூசசிகளின்
ஒளிச் சிதறல்கள் போல்

இருண்ட இதயத்தில்
அவ்வப்போது நம்பிக்கையின் ஊக்கங்கள்
வாழ்கையின் பிடிப்பை உறுதியாக்கின


இதயம் பிளக்கவில்லை
மருத்துவரை நாடவில்லை
மனதை மேன்மையாக்க நாடியது
இறைவனின் ஆற்றலை அறிந்து

சபலமில்லா பிரார்த்தனைகள்
சலிப்பில்லா வேண்டுதல்கள்
விருப்பமான இறைவனுக்கான தொழுகைகள்
தொடர்ந்த நிகழ்வாகியது

நலிந்த மனம்
நம்பிக்கைப் பெற்றது
உறுதியான நம்ம்பிகையால்
இருளும் ஒரு தடங்களாகவில்லை
இறுதிவரை தொடர உத்வேகம் தந்தது

இறப்பது உறுதி
இருக்கும்வரை இயன்றதை செய்வோம்
தொட்டிலில் தொடங்கிய வாழ்க்கை
தொட்டிலிலும் முடியும்
தொட்டிலை விட்டு வெளியில் வந்து வளர்ந்தும் முடியும்

முடிவைப் பற்றி சிந்தித்து
முடங்கி விடாமல்
முயன்றவரை செய்து முடிப்போம்

No comments:

Post a Comment