Wednesday 11 June 2014

இது முடியுமா! என்று பையன் கேட்கிறான்!

                                                                    பட source
இதயம் அழுகிறதாம்
மனம் விரும்புகிறதாம்
கண்கள் பேசுகிறதாம்
பையன் கேட்கிறான்
இது முடியுமா! என்று !

நடக்காதெல்லாம் நடக்கும் போது
இது மட்டும் நடக்காதா ! என்றேன்

நீ கவிஞனாக வந்தால்
அது நடக்குமென்றேன்

நான் கவிஞனாக நினைப்பது நடக்குமா !
என்றான் .
நீ முயற்சித்தால் முடியுமென்றேன்

அப்பொழுது நான் அதையும் முயற்சிக்கிறேன் என்றான்
அவன் முயற்சிக்க நினைப்பது
இவைகள்
இதயத்தை அழ வைப்பது
மனதை விரும்ப வைப்பது
கண்களை பேச வைப்பது

No comments:

Post a Comment