Wednesday, 11 June 2014

திருமணத்திற்கு முன்பும்! திருமணத்திற்கு பின்பும் !

திருமணத்திற்கு முன்

உன்னை மிகவும் நேசிக்கின்றேன்
உனக்காக எதுவும் செய்யவேன்
உனக்காக உயிரையும் விடுவேன்
உன் மடியில் உயிர் பிரிய விரும்புவேன்.
நமக்குள் கருப்பு சிகப்பு தடையில்லை .
நம் திருமணம் உனது பெற்றோர்கள் விரும்ப நிகழும்
நம் திருமணம் நிகழ பணமோ பொருளோ தடையாகாது இருக்காது
=============

திருமணத்திற்குப் பின்

உனது செயல் சரியல்ல
உனக்கு உனது பெற்றோர்கள் மீது மட்டும் பாசம்
உனக்கு எனது பெற்றோர்கள் மீது பாசமில்லை
நீ நினைத்த போதெல்லாம் உன் தாய் வீட்டுக்கு சென்று விடுகிறாய்
நீ நினைத்ததெல்லாம் வாங்கச் சொல்லி வற்புறுத்துகின்றாய்
நீ நான் சேர்த்த பொருளை உங்கள் வீட்டில் கொண்டு சேர்க்கின்றாய்
நீ சீராக எந்த பொருளும் அல்லது பணமும் கொண்டு வரவில்லை
நீ எனது பெற்றோர்கள் , எனது உடன் பிறந்த உறவுகளை பிரிக்க நினைக்கின்றாய்
நீ தனிக் குடித்தனம் விரும்பி அனைத்தையும் செய்கின்றாய்
நீ நினைப்பது நான் உன்னை அடிமையாக்கி விட்டேனென்று.
நீ தான் என்னை அடிமையாக்கி விட்டாய்

தவறு உன்னிடமிருக்க
தவறு நான் செய்வதாக குற்றம் சாட்டுகின்றாய்
உன் தவறு என்ன என்பதனை சிறிதாவது சிந்தித்தாயா!
ஆண்கள் அனைவரும் மோசமானவர்கள் என்று பொதுப்படையாக சொல்கின்றாய்
உன் தந்தையும் உனது சகோதரர்களும் ஆண்கள்தான் என்பதை மறந்து பேசுகின்றாய்
உன் தாய் மற்றும் நம் காதல் திருமணத்தினை விரும்பாதவர்கள்
உன் தவறை நினைத்து நீ திருந்த உன்னை சிந்திக்க விட்டு விடுவார்களா !

''இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்: முஸ்லிம் 291

No comments:

Post a Comment