Tuesday 10 June 2014

படிக்க வைக்க அவ்வளவு கடினமா !

படிக்க வைக்க அவ்வளவு கடினமா !

பத்திரமாய் போய் வரச் சொன்னார்கள்
பத்திரத்தை வைத்து படிக்க கடன் வாங்கி வரும்போது

பத்திரமாய் பள்ளிக்கூடம் சென்று வா
பள்ளிக்கூடம் சென்று வரும் வழியில்
பாதையில் விபதுக்குள்ளாகாமல் வந்து சேர்

பவுத்திரமாய் இரு
பழகும் பையன்களிடம்

பத்திரத்தை வைத்து கடன் வாங்கி படிக்க வைக்கின்றேன்
பத்திரத்தை மீட்பதற்குள் பத்திரம் மூழ்காமல் இருக்க வேண்டும்

அரசு ஆனைகள் வந்து
அளவுக்கு அதிகம் வசூல் செய்யும் பள்ளிக்கூடங்கள்
மூடாமல் இருக்க வேண்டும்

No comments:

Post a Comment