Wednesday 4 June 2014

தான் பெற்ற பிள்ளையானாலும் ..

நாம் பெற்ற பிள்ளையை அடுத்தவர் மத்தியில் கண்டிப்பதையோ அல்லது தண்டிப்பதையோ அவன் விரும்புவதில்லை .
அவ்விதம் செய்ய உறவு விரிவு படுகின்றது .

இந்நிலையில் அடுத்தவரை கேவலப் படுத்துவதும் ,தூற்றுவதும் யார் ஏற்றுக் கொள்வார் . விரோதம் அதிகமாகும்

நீர் பெற்ற அறிவு மக்களை நல்வழி படுத்த மற்றும் நேர்வழி படுத்த உதவட்டும் .அது உன்னிடமிருந்து ஆரம்பிக்க நீர் உயர் வாழ்வை முதலில் பெற்றுக் கொள்

படித்தவைகளை கருத்தாக கொடுப்பாய்
நயம்பட கவிதையை இசையாக கொடுப்பாய்
பொன் மொழிகளை கொடுப்பாய்
அத்தனையும் அருமைதான்
நோன்பு வைக்கச் சொல்பவர் நோன்பு வைக்க வேண்டும்
பொய் சொல்லக் கூடாது என்று சொல்பவர் பொய் சொல்லாமல் இருக்க வேண்டும்
வட்டிக்கு வாங்குபவர் வட்டிக்கு விடுபவனை ஏசுதல் முறையோ
தர்மம் வீட்டிலிருந்து ஆரம்பிக்கப் பட வேண்டும்
வீட்டில் உள்ள மக்களை வாட விட்டு மற்றவருக்கு
அள்ளி அள்ளி வழங்குதல் முறையோ!
தாகாத முறையில் பணம் சேர்த்து தர்மம் செய்வதுபோல் ஆகிவிடும்

No comments:

Post a Comment