Tuesday 24 June 2014

நினைப்பதை ஒத்திப் போடுவதில்லை


கணினியை விட்டு நீங்கினால்
கணினியில் எழுதியது என்ன கேட்டால்
கணினியில் எழுதிய வரிகள் ஒன்றும்
மனக் கணினியில் மறந்து விடுகின்றது

நினைப்பதை ஒத்திப் போடுவதில்லை
ஒத்திப் போட்டால் ஓடிப் போய் விடுகின்றது

யார் தங்கள் கடனை அடைக்க நினைக்கின்றார்களோ
அக் கடனை அடைக்க ஆண்டவன் அருள் செய்வான்

யார் தங்கள் கடனை அடைக்க முயலவில்லையோ
அவர்களுக்கு இறைவனது அருள் கிடைக்காமல் கடனிலிலேயே மூழ்குவார்கள்

யார் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறாரோ அவரை அல்லாஹ்வும் அழித்து விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார். (ஆதாரம் : புகாரீ 2387)

வசதியுள்ளவர் (தனது கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவிரிடம் தவணை சொல்லி)தள்ளிப் போடுவது அநியாயமாகும். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார். (ஆதாரம் புகாரீ 2400, முஸ்லிம் 1564, அபூதாவூத் 3345, திர்மிதி 1308, நஸயீ 4705, இப்னுமாஜா 2404, அஹ்மத், முஅத்தா)

No comments:

Post a Comment