Tuesday 10 June 2014

பையனுக்கு படிப்பு வராது என்பதை யார் சொல்ல வேண்டும்!


பையனுக்கு படிப்பே வரவில்லை
பையன் வீட்டில் பேசுவது தமிழில்
பையன் படிப்பதோ ஆங்கில மொழியில்

பையனுக்கு படிப்பு வராது என்பதை யார் சொல்ல வேண்டும்
பையனுக்கு படிப்பு வராது என்பதை மனோதத்துவ மருத்துவர் சொல்லுவாரா !
பையனுக்கு படிப்பு வருமென்பதற்கு விளக்கங்களை கொடுப்பார்

பொதுவாக ஆங்கில மொழியில் படிக்கும் பையனுக்கு
தமிழும்,கணிதமும் கடினமாக இருப்பது இயல்பு

சில நாடுகளில் எட்டாம் வகுப்பு வரை
எதில் அதிக மதிப்பெண்கள் வாங்குகின்றாரோ
அப் பாடத்தை முக்கிய பாடமாக கற்பித்து
மற்ற பாடங்களை பகுதிப் பாடமாக பொது அறிவுக்காக
கற்பிப்பர்

நம் நாட்டில் அனைத்தையும் கட்டாயப் பாடமாக
பனிரெண்டாம் வகுப்பு வரை கற்பித்து
கற்பவருக்கு சுமையாக்குகின்றனர்

உலகில் பல நாடுகள் தாய் மொழியிலேயே கற்பிக்கின்றார்கள்
விருப்ப மொழியாக மற்றொரு மொழியும் கற்பிக்கின்றார்கள்

மொழியில் வல்லமை பெறுவது படிப்பதால் மட்டும் வராது
மொழியில் வல்லமை பெற கற்பதோடு
அம்மொழியில் பேசிப் பழகி பேசும் வல்லமையும் பெற வேண்டும்

ஒன்றில் திறமை அற்றவர்
மற்றொன்றில் திறமையோடு இருப்பார்
அவர் திறமையை கண்டறிந்து
அதில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்க
அவர் அதில் சிறப்படைவார்

No comments:

Post a Comment