Friday 13 June 2014

மரணத்தை எதிர்பாராத விபத்தினால் வரும் நிலையை எங்களுக்கு தந்துவிடாதே!

வேண்டுதல் வேண்டாமையிலானாய் நீ இருக்கிறாய்
வேண்டுதல் வேண்டப்படுபவர்காளாய் நாங்கள் இருக்கிறோம்

பெறுதல் பெறப்படாதவனாய் நீ இருக்கிறாய்
பெறுதல் பெறப்பட்டவர்களாய் நாங்கள் இருக்கிறோம்

பிறப்பும் இறப்பும் உனக்கில்லை
பிறப்பும் இறப்பும் உன்னால் நாங்கள் பெற்றோம்

வியாதியும் தந்தாய்
வியாதி தீர மருந்தும் கற்றுக் கொள்ளச் செய்தாய்
வியாதியை எங்கள் செயலாலும் உருவாக்கிக் கொண்டோம்

மரணம் உனக்கில்லை
மரணத்தை எதிர்பாராத விபத்தினால் வரும் நிலையை எங்களுக்கு தந்துவிடாதே
மரணம் எந்நிலையில் எங்களுக்கு வந்தாலும்
மரணத்திற்கு முன் எங்கள் நாவு உன் உயர்வை(கலிமாவை ) சொல்லிட வேண்டும்

'வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. '
-திருக்குறள்

No comments:

Post a Comment