Thursday, 9 January 2014

அரசியல் நடத்தும் மனிதர்களின் பண்பும் உயர வேண்டும்

அரசியல் பாடம் படித்து பட்டம் பெற்றோம்.
சட்டம் படித்து பட்டம் பெற்றோம்.

அரசியலில் ஈடுபாடு உண்டு
அனைத்து அரசியல் கட்சிகளின் கொள்கைளிலும்
அனைத்திலும் உடன்பாடு வருவதில்லை
அதனால் எந்த கட்சியிலும் நான் உறுப்பினர் அல்ல
அரசியலில் நாகரீகம் குறைகிறது
அரசியல் கொள்கையும் உயர்வாக இருக்க வேண்டும்
அரசியல் நடத்தும் மனிதர்களின் பண்பும் உயர வேண்டும்
அரசியலில் வாக்குப் போட ஜாதி ,மத பிரிவினை கிடையாது
அரசியலில் வாக்குப் போட படித்தவர் தான் தகுதியானவர் என்பது ஏற்புடையதல்ல
ஒருவருக்கு சமைக்க தெரியாமல் இருக்கலாம்
சமைத்த உணவை உணவை ருசி பார்க்க அவருக்கு தெரியும்
இம்முறை ஆட்சியால் அவர் பலன் அடையாமல் இருந்தால்
அடுத்த தேர்தலில் அவர் மாற்றம் தேடுவார் . இதற்க்கு கல்வி அவசியமில்லை. அனுபவ ஆய்வும் அறிவும் போதும்.

கற்பது அவசியம் என்பது தனி .
கற்றவரே பாராளுமன்றத்திலும் ,சட்டமன்றத்திலும் வாக்கை போடத் தெரியாமல் செல்லாததாக ஆக்கி விடுகிறார்
படித்தவர் ,சட்டம் பயின்றவர் ஆட்சி பாராளுமன்றத்திலும் ,சட்டமன்றத்திலும் கொள்கையை விளக்காமல் துதி பாடுவதும் ,மற்றும் நட்பு மனப்பான்மையை நறுக்கியும் வருவதனை நாம் பார்க்கின்றோம்

கொள்கை வேறு
நட்பு வேறு
கருத்து விளக்கம் தேவை
கருத்து விளக்கத்தில் மோதல் ஏன் ?

இம்மாதிரியான மோதல் மனப்பான்மை ஜாதியில், மதத்தில், மார்கத்தில் நாளடைவில் அதிகமாகிவருகின்றது.
சட்டமும் .மார்க்கமும் வந்ததே மனித நன்மைக்காகவே
தவறு இருப்பின் சுட்டிக் காட்டுவோம் அது அவர் உரிமை. அதை ஏன் விரோதமாக சிந்துக்க வேண்டும்
மனிதநேயம் வளர வேண்டும்

1 comment: