Thursday, 30 January 2014

ஒற்றுமை படாத பாடு படுகிறது


ஒற்றுமை படாத பாடு படுகிறது

நான் ஜப்பான் போயிருந்தபோது ஒருவரை சந்திதேன்
அவர் ஆங்கிலத்தில் கேட்டார் நீங்கள் எந்த நாட்டிலிருந்து வந்துள்ளீர்கள்?

நான் இந்தியாவிலிருந்து வந்துள்ளேன்
இந்தியாவில் எப்பகுதி
இந்தியாவில் தென்னாடு
தென்னாட்டில் எந்த ஸ்டேட்
தென்னாட்டில் தமிழ்நாடு
தமிழ்நாடு என்றதும் அவர் தமிழில் பேசினார்

தமிழ்நாட்டில் எந்த ஜில்லா (அப்பொழுது அப்படித்தான் சொல்வார்கள் )
தஞ்சை ஜில்லா (அப்பொழுது எங்கள் ஊர் தஞ்சை ஜில்லா.இப்பொழுது நாகப்பட்டினம், மயிலாடுதுறை அருகில் உள்ள நீடூர்)
நானும் தஞ்சையை சேர்ந்தவன்தான் .
நெருக்கம் அதிகமானது

ஒரு மொழி பேசினால் அல்லது ஒரு ஊர்காரன் என்றால் வெளிநாட்டில் ஒற்றுமை கிளை விடுகிறது.

ஆனால் இங்கு ஒரு ஊரை சார்ந்தவன் ,ஒரு மொழி பேசுபவன் , ஒரு மார்க்கத்தை பின்பற்றுபவனாக இருந்தாலும் ஒற்றுமை இல்லை . அண்ணன் தம்பிகளுக்குள் ஒற்றுமை இல்லை .மனித நேயமுமில்லை
---------------------------

இப்பொழுது இங்கேயே கேட்கப்படும் கேள்விகள்

நீங்கள் முஸ்லிமா ?
ஆமாம்
முஸ்லிமென்றால் சுன்னத் ஜாமத்தா அல்லது தவ்ஹீதா
அல்லது மற்றதா

எந்த கட்சியை ஆதரிகிறீர்கள்
தி.க. வா அல்லது தி.க.விலிருந்து வந்த மற்ற கட்சியா

முஸ்லிம் லீக்கா அல்லது முஸ்லிம்கள் நடத்தும் மற்ற கட்சிகளையா

காங்கிரஸா !
காங்கிரசில் எந்த பிரிவை

இன்னும் பல கட்சிகளை கேட்பதற்குள்
நான் ஓடி விட்டேன்

No comments:

Post a Comment