Thursday 9 January 2014

இறைவன் மன்னிப்பானா!


தவறு செய்தவர் இறைவன் மன்னிப்பு நாடி இறைவனின் தயை தேடட்டும்
தவறு செய்தவர் மற்றவருக்கு அந்த தவறை செய்தால் தவறால் பாதிக்கப் பட்டவர் மன்னிப்பது அவசியம்.
பாதிக்கப் பட்டவர் மன்னிக்கும் வரை இறைவன் மன்னிக்க மாட்டான் .
(கடன் அடைக்கப் படும்வரை ,ஒருவரை மனம் நோக பேசுதல் மற்றும் பல )

தனக்குத் தானே ஒருவர் தவறு செய்து விட்டால் இனி எந்த பாவமான தவறுகளை செய்ய மாட்டேன் என்ற
மனஉறுதியோடு இறைவனிடம் இறைஞ்ச வேண்டும்.
அது இறைவனுக்கும் அவருக்கும் தொடர்பு கொண்டது அது கடமையானதாக இருந்தாலும்.

ஒரு முறை நாயகம் அருகில் ஒரு பெண் வந்து 'நான் கற்புக்கு களங்ம் வர தவறு செய்து விட்டேன்.அதனை நினைத்து இறைவனிடம் மன்னிப்பு தேடுகின்றேன்.இறைவன் மன்னிப்பானா' என்று மனமுருகி கேட்க நாயகம் மறுபக்கம் திரும்பிக் கொண்டார்கள் .அப்பக்கமும் சென்று அப்பெண் அதையே தொடர நாயகமும் வேறொரு பக்கம் திரும்ப அந்த பெண் விடுவதாக இல்லாமல் தன் கவலையை வெளிப்படுத்த விரும்ப நாயகம் ' இறைவன் மறைத்து வைக்க நீ ஏன் வெளிப் படுத்துகின்றாய்' என்றார்கள் .
பின்பு மார்க்க சட்டப்படி அவளுக்கு உரிய தண்டனை கொடுக்கப் பட்டபோது கூடி நின்ற மக்கள் எள்ளி நகைத்தனர் . நாயகம் நகைக்காதீர்கள் அப்பெண் இறைவனது மன்னிப்பை பெற்று விட்டார் அதனால் அவருக்கு சுவனம் கிடைக்கும்' என்று மற்றவர்களை கண்டித்தார்கள்

No comments:

Post a Comment