Thursday 9 January 2014

சிறப்பு அறிதல் சிறப்பு


மானிடராய் பிறத்தல் சிறப்பு
பிறப்புக்கு காரணமானவனை தொழுதல் சிறப்பு
பெற்றோரை பேணி பாதுகாத்தல் சிறப்பு
சேவை செய்தல் பிறப்பின் சிறப்பு

சிறப்பை நேசித்தல் சிறப்பு
சிறப்போடு வாழ்தல் சிறப்பு
சிந்தித்து செயல்படுதல் சிறப்பு
செயல்படும் ஆற்றலை செயல்படுத்துதல் சிறப்பு

மனிதநேயம் விரும்புதல் சிறப்பு
மனதில் உந்துதல் சக்தியை உருவாக்குதல் சிறப்பு
படைப்பின் அருமையை அறிந்து நேசித்தல் சிறப்பு
பொருளை வீண் செய்யாமல் இருத்தல் சிறப்பு

நன்மையை நாடுதல் சிறப்பு
நன்மையான காரியங்களை செய்விக்க ஊக்குவித்தல் சிறப்பு
நலம் நாடும் நன்மக்களை சேர்பித்தல் சிறப்பு
நன்மைநாடி மற்றோர்க்கு உயர்வாக கற்றதை கற்பித்தல் சிறப்பினும் சிறப்பு

சேவை செய்ய தலைமை தன்னை தேடி வந்தால் அதனை ஏற்றுக் கொள்ளுதல் சிறப்பு
தலைமையை தேர்வு செய்ய தேர்வு முறை சிறப்பு
தலைமை பொறுப்பு கொடுக்கப் பட்டபின் தலைமை தவறு செய்யாதிருக்கும் வரை அவரை மதித்தல் சிறப்பு
தலைமை பொறுப்பில் இருந்து தான் சேவை செய்ய முடியாத நிலை வர தலைமையை விடுதல் சிறப்பு

No comments:

Post a Comment