Monday, 13 January 2014

ஆளுமை சக்தி !

ஆளுமை உள்ளத்தின் வெளிப்பாடாகும் . அது உற்சாகத்தின் ஆணி வேர். சிந்தனையின் பிறப்பிடம் .உழைப்பினை உந்தும் சக்தி. அறிவின் அடித்தளம். இத்தனையும் சேர முயற்சி என்ற உந்தும் சக்தி தேவை.

ஆல மரத்தின் விதை சிறுது ஆனால் அது உண்டாக்கும் மரம் பெரிது. உடலின் உருவத்திற்கும் அவன் பெற்றிருக்கும் ஆற்றலுக்கும் சம்பந்தம் இல்லை .மெலிந்த மேனியும், அழகற்ற தோற்றம் கொண்ட எத்தனையோ பேர் சிறப்பான ஆளுமை பெற்றவர்களாகத் திகழ்வதனையும் நாம் பார்க்கின்றோம் .ஆள் பாதி ஆடை பாதி என்று எண்ணி தன்னிடம் உள்ள ஆளுமையினை குறைத்து விடக்கூடாது.
நிச்சயமாக உங்களுக்குள் ஒரு ஆற்றல் மறைந்துள்ளது என்று நம்பி அதனை வெளிக்கொணர செயல்படுங்கள் .

அதிகாரத்தினை தவறான செயல்களில் பயன்படுத்துவதனை நாம் பார்த்து பயந்து அடங்கி கிடக்கின்றோமே! ஏன்? நம்மில் ஒட்டிக் கொண்டிருக்கும் அடிமைத்தனம் . ஆளுமை சக்தி அடிமைத்தனத்திற்குக் கிடைத்து விடாது. நம்மில் இருக்கும் ஆளுமை சக்தி வெளிப்படுமானால் அது நல்ல முறையில் நல்ல நோக்குடன் செயல்பட்டால் இந்த இழிநிலை தொடராது .தொடர் முயற்சி திருவினையாக்கும் என்று நம்புங்கள். ஆளுமை சக்தியால் கிடைத்த அனுபவங்களும், ஆற்றல்களும் ஒருங்கிணைப்பும், உந்தும் சக்தியும் வீணாகிப் போய்விடக் கூடாது. நமது ஆளுமை சக்தியை வெளிக்கொணர்ந்து நல்ல நோக்குடன் அதனை பயன்படுத்தி அனைவரும் சிறப்பாக வாழ முயல்வோம்

No comments:

Post a Comment